For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தல் பத்திர விவகாரத்தின் மூலம் ஊழல் கூட்டணி யார் என்பது வெளிப்படையாக தெரிகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

07:56 PM Mar 17, 2024 IST | Web Editor
தேர்தல் பத்திர விவகாரத்தின் மூலம் ஊழல் கூட்டணி யார் என்பது வெளிப்படையாக தெரிகிறது   முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
Advertisement

தேர்தல் பத்திர விவகாரத்தின் மூலம் ஊழல் கூட்டணி யார் என்பது வெளிப்படையாக தெரிவதாக இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடங்கி 63 நாட்கள் நடைபெற்ற இந்த பயணம் 14 மாநிலங்களை கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவுற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவையொட்டி, மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை (மார்ச் 17) கூட்டணி  கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரத்பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் முதல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் என்பதால் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இந்த பொதுக்கூட்ட மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

“இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரி தொடங்கப்பட்டபோது நான் உடன் இருந்தேன். இப்பொழுது யாத்திரை மும்பையில் நிறைவடைகிறது. கூடிய விரைவில் இந்த பேரணி டெல்லியை அடையும். ராகுல் ஒற்றுமை யாத்திரை தொடரும்போது பல்வேறு இடையூறுகளையும், தடைகளையும் பாஜக அரசு செய்து வந்தது. அவர் பல்வேறு மாநிலங்களுக்கு யாத்திரை சென்றபோது மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.

தேவையில்லாத காரணங்களை கூறி பாஜக அரசு ராகுல் யாத்திரைக்கு அனுமதி வழங்காமல் இருந்தது. ஆனால் ராகுல் அவை அனைத்தையும் உறுதியாக எதிர்த்தார். உச்ச நீதிமன்றத்தில் போராடி ராகுல் காந்தி பதவியை பெற்று நாடாளுமன்றத்திற்கு மீண்டும் எம்.பி.யாக வந்தார். அவரது போராட்டம் தனி ஒரு மனிதனுக்காகவோ அல்லது காங்கிரஸ்காகவோ இல்லை. அது இந்தியாவிற்கானது.

இந்தியாவிற்கு இப்போது ஒற்றுமை தான் தேவைப்படுகிறது. அதை தான் ராகுல் காந்தி செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 10 ஆண்டுகளில் 2 மட்டுமே செய்தது. ஒன்று வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வது, மற்றொன்று பொய் பிரச்சாரங்களை செய்வது. பாஜக இந்திய கூட்டணியை ஊழல் கூட்டணி என கூறி வருகிறது. ஆனால் தேர்தல் பத்திர விவகாரத்தில் வெளிப்படையாக தெரிகிறது யார் அதை செய்கிறார்கள் என்று. இந்தியாவை காப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து வாருங்கள்” 

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement