“அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் ஆளே இல்லையா? விசிகவின் தலைவர் யார்?” - அண்ணாமலை கேள்வி!
அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் இந்தியாவில் ஆளே இல்லையா? விசிகவிற்கு ஒரு தலைவரா? இரண்டு தலைவரா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் விடுதியில், இன்று மாலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விகடன் நீண்ட கால பாரம்பரியம் மிக்க நிறுவனம். ஆனந்த் டெல்டும்பே ஒரு நக்சல். தமிழகத்திற்கு நக்சல்களை கொண்டு வந்துவிடலாம் என நினைக்கிறார்களா என தெரியவில்லை. அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் இந்தியாவில் ஆளே இல்லையா? விசிகவிற்கு ஒரு தலைவரா? இரண்டு தலைவரா? விசிக திருமாளவன் கையில் இல்லை. லாட்டரி விற்பனை செய்யும் நபரின் மருமகன் கையில் இருக்கிறது. அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் நடப்பதற்கு இது உதாராணம்.
விஜய் மணிப்பூர் செல்வதற்கு தயாராக இருந்தால், அவருடன் நானும் சென்று சுற்றி காட்ட தயார். அவர் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. விஜய் இன்னும் அரசியலை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசியதில் தவறில்லை. தமிழகத்திலும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பாஜவில் இணைந்து வருகிறார்கள். பொய்களும் ஓரளவுக்குத்தான் பேச முடியும். தமிழகத்தை எத்தனை காலத்திற்கு ஏமாற்றி வைத்திருப்பீர்கள். நடந்தது புத்தக வெளியீட்டு விழா இல்லை. நக்சல் அரசியலை கொண்டு வந்து விடாதீர்கள். பறவைகள் எச்சிலை போடுவதைப்போல அரசியல்வாதிகள் கட்சி மாறுகிறார்கள். அவர்களை பற்றி பேசி பாஜக தரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை.
தேசிய பாதுகாப்பில் காம்பிரமைஸ் செய்யதீர்கள். கருத்துகள் திணிப்பதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. மணிப்பூரில் பாஜக உருவாக்கிய கலவரமா? ஆம் சாதி பிரச்னைகள் இருக்கிறது. ஜனநாயக ரீதியாகத்தான் அதை சரிசெய்ய வேண்டும். தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி. ஒரே குடும்பத்தை சார்ந்தவர் வந்தால் இதுபோன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும். மன்னர் ஆட்சி நடக்கிறதா? என்றால் இல்லை. ஆதவ் அர்ஜூனா மீது திருமாவளவன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சிக்கு யார் தலைவர்? மணிப்பூரில் துப்பாக்கி சூடு தீர்வு கிடையாது. வரலாறு தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
புதிய குரல் வந்திருக்கிறார். விஜய்யை வரவேற்கிறேன். பாஜவில் உள்ள ஜாமின் அமைச்சர்கள் எனக்கு தெரியாது. நான் ஜாமின் அமைச்சர் என்று சொல்வதில் என்ன தவறு. நான் எப்போதாவது தனியாக ஆக்ஸ்போர்டு போய் படித்தேன் என்று சொன்னேனா? இணையதளத்தில் இருக்கிறது. இதை சொல்வதற்கு அமைச்சர் தேவையா? அவரும் ஒரு பக்கம் படித்தார். அவர் கம்பி எண்ணுவதை படித்தார். நான் ஆக்ஸ்போர்டில் படித்தேன். நியாயத்தை பேசினால் மிரட்டல்.
நான் ஆக்ஸ்போர்டு போய் படித்ததை பெருமையாக பேசவில்லை. மீண்டும் நான் கடிகாரத்தில் ஒரு வருடம் பின்னால் செல்ல விரும்பவில்லை. சிந்தாதிரிப்பேட்டை சம்பவம் தொடர்பாக அந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஜிபிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். முதலமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக நீக்க வேண்டும். கைது செய்ய வேண்டும். சிறப்பு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
காவல்துறை நடவடிக்கை எடுத்து தங்களது பெருமையை மீட்டுக்கொள்ள வேண்டும். மாமனாரின் வீட்டில் அழையா விருந்தாளியாக இருக்கிறேன். கோவை வந்தால் தங்குவதற்கு கஷ்டப்பட்டு காளப்பட்டி சாலையில் வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறேன். போட்டோ எடுத்து போட்டு அந்த உரிமையாளரை மிரட்டி என்னை வேறு வீடு பார்க்க வைத்து விடாதீர்கள். திருமாவளன் ஒரு சாமர்த்தியமான தலைவர். இப்போது நடந்ததுள்ளது திருமாவளவனிற்கு பெருமை சேர்க்கவில்லை.
யாருக்கும் கட்டுப்பட்டு இல்லை என்றால், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சந்தேகம் வருகிறதல்லவா? ஆதவ் அர்ஜூனாவை நான் தான் அனுப்பியிருக்கிறேன் என கூறினால், அவர் கூறிய கருத்துகளுக்கு பொறுப்பேற்க முடியுமா?” என பேசியுள்ளார்.