For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரளாவுக்கு உள்ளே எதிர்க்கட்சி... வெளியே கூட்டணி... - I.N.D.I.A. கூட்டணியை விமர்சித்த சீமான்!

09:30 PM Apr 14, 2024 IST | Web Editor
கேரளாவுக்கு உள்ளே எதிர்க்கட்சி    வெளியே கூட்டணி      i n d i a  கூட்டணியை விமர்சித்த சீமான்
Advertisement

I.N.D.I.A. கூட்டணி என்பது உண்மையான கூட்டணியா? என்று நாகையில் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

Advertisement

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “சத்தம் பத்தாது விசில் போடு..!” - விஜய் குரலில் வெளியானது ‘GOAT’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை முடிவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரப்புரை உச்சகட்ட விறுவிறுப்பை அடைந்துள்ளது. இந்நிலையில், நாகை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நாகை அபிராமி அம்மன் திருவாசகம் பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது :

“I.N.D.I.A. கூட்டணி என்பது கேரளாவுக்குள் எதிர்க்கட்சியாகவும் கேரளாவுக்கு வெளியே கூட்டணியாகவும் செயல்படுகிறது. இது கூட்டணி தர்மமா? I.N.D.I.A. கூட்டணி என்பது உண்மையான கூட்டணியா? பாஜக பத்தாண்டு கால ஆட்சியில் கச்சத்தீவை மீட்டெடுக்காமல், தேர்தல் நேரத்தில் அதைப் பற்றி பேசி வருகிறது. பாஜகவின் ஆட்சி காலத்தில் காவேரி நதி நீரை கூட தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தர முடியவில்லை. தேர்தல் வாக்குறுதியில் கூட காவேரி நதி நீரைப் பற்றி கூறவில்லை. காவேரி நீரை பெற்று தருவதாக பாஜக அறிவித்தால் கர்நாடகாவில் தோற்றுவிடும் என்ற தோல்வி பயம் எழுந்துவிட்டது”

இவ்வாறு நாகையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Tags :
Advertisement