For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியா - பாகிஸ்தான் போட்டியானது பாஜக நாட்டுக்கு செய்துள்ள துரோகம் - உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்!

ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணியை விளையாட அனுமதித்ததின் மூலம் பிசிசிஐபாஜகவும் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது என்று சிவசேனா UTB கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
07:41 PM Sep 12, 2025 IST | Web Editor
ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணியை விளையாட அனுமதித்ததின் மூலம் பிசிசிஐபாஜகவும் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது என்று சிவசேனா UTB கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
இந்தியா   பாகிஸ்தான் போட்டியானது பாஜக நாட்டுக்கு செய்துள்ள துரோகம்   உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்
Advertisement

17-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 57 ரன்னில் சுருக்கியது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி இலக்கை 4.3 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து இந்தியா தனது இரண்டாவது போட்டியில் மற்றொறு ஏ பிரிவு அணியான பாகிஸ்தானை நாளை (செப்.14) எதிர்கொள்கிறது.

Advertisement

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் இப்போட்டி நடைபெறுவதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் ஆசியக்கோப்பை போட்டி தொடர்பாக மத்திய பாஜக அரசை பாஜகவுக்கு சிவசேனா UTB கட்சியின் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணியை விளையாட அனுமதித்து இந்திய கிரிக்கெட் வாரியமும் (பிசிசிஐ) பாஜகவும் நாட்டுக்கு செய்துள்ள துரோகம் . போட்டி நடைபெறும் நாளான 14-ம் தேதி 'எனது சிந்தூர், எனது நாடு' என்ற பெயரில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement