For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்" - நாடாளுமன்றத்தில் தகவல்!

10:17 AM Dec 13, 2023 IST | Web Editor
 இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்    நாடாளுமன்றத்தில் தகவல்
Advertisement

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement

மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர்
கூறியுள்ளதாவது:

செவிலியர் - மக்கள்தொகை விகிதம் 1:476 ஆக உள்ளது.  தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி 2022 ஜூன் நிலவரப்படி 13,08,009 ஆங்கில முறை மருத்துவர்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு 1 டன் ஆப்பிள் மாலை!

மேலும் 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளனர். அந்த வகையில், நாட்டில் மருத்துவர்கள்- மக்கள்தொகை விகிதம் 1: 834 ஆக உள்ளது.  மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதனால் நாட்டில் மருத்துவம் பயில்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து,  2014-ஆம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில் இப்போது நாட்டில் 706 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  இது 82 சதவீத உயர்வாகும்.  2014-இல் 51,348 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இருந்தன.  இப்போது இந்த எண்ணிக்கை 1,08,940 ஆக உயர்ந்துள்ளது.  மருத்துவ மேற்படிப்புக்கான இடம்31,185-இல் இருந்து 70,674 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 127 சதவீத அதிகரிப்பாகும் என்று அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement