’டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணி’ - ராகுல்காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப் பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், மக்களவைத் தோ்தல் மோசடியைக் கண்டித்து, பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம் நடத்தியது. இந்த குற்றச் சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம் ராகுல் காட்டிய ஆவணங்கள் மேற்கண்ட தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டதல்ல என்று தெரிவித்திருந்தது. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பேரணிக்கு அனுமதி பெறப்படவில்லை டெல்லி காவல்துறை தெரிவித்திருந்தது. மேலும் டிரான்ஸ்போர்ட் பவர் வழியாக பேரணியாக தேர்தல் ஆணையத்திற்கு இந்தியா கூட்டணி எம்பிகள் செல்ல இருந்த சாலை முழுவதும் டெல்லி காவல்துறையினர் மற்றும் சிஏஎஸ் எப் உள்ளிட்ட துணை ராணுவ படையினரால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது.
.இந்நிலையில், இன்று ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணி சென்றனர். எம்.பி.க்கள் 'வாக்கு திருட்டு' என்ற பதாகைகளை ஏந்தியவாறு நாடாளுமன்றத்தில் இருந்து பேரணி சென்ற போது அவர்கள் டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரால் டிரான்ஸ்போர்ட் பவன் அருகே தடுத்துl நிறுத்தப்பட்டனர் .தொடர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி பேரணி செல்ல முயற்சித்தனர். இதனை தொடர்ந்து மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர்.