தேர்தல் முடிவு தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை; டெல்லி செல்லும் மு.க. ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 5, 2024) காலை தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளையும் காங்கிரஸ், திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதற்கு நன்றி சொல்லும் வகையில் சென்னையில் உள்ள தி.மு.க. தலைமையகத்தில் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசுகையில் டெல்லியில் நடைபெறும் கூட்டணியில் பங்கேற்கிறேன்” என்றார். மேலும் தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்றனர். அதற்கு மக்கள் வாக்குகள் மூலமாக பதிலடி கொடுத்துவிட்டன்” என்றனர்.
மேலும், கடந்த தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்தத் தேர்தலில் 40-40ஐ தமிழக மக்கள் கொடுத்துவிட்டனர். பிரதமர் மோடிக்கு எதிர்பலைகள் உள்ளது என்பதை இது காட்டுகிறது.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன்” என்றார். தொடர்ந்து, பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு என் உயரம் எனக்கு தெரியும் என்றார். கருணாநிதியும் முன்பு இதைப் போல் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் கூடுகின்றனர். தேர்தல் முடிவு தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நத்தவுள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 5, 2024) காலை தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.