Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஒரே வரியில் 'சாரி' என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?" - நயினார் நாகேந்திரன் கேள்வி

ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என முதலமைச்சருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
12:09 PM Jul 02, 2025 IST | Web Editor
ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என முதலமைச்சருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீசார் கடுமையாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணை மரணம் என்பதால் இந்த வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதற்கிடையே, உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தை தொலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் தாயிடம் "Sorry மா" என தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த நிலையில், முதலமைச்சரின் செயலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"முதுலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட  அஜித் குமாரின் தாயிடம் “சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதலமைச்சரின் கடமை? சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதலமைச்சர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் காவல்நிலையங்களிலும், காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்:

1. பிரபாகரன் (வயது 45) - நாமக்கல் மாவட்டம்

2. சுலைமான் (வயது 44) - திருநெல்வேலி மாவட்டம்

3. தாடிவீரன் (வயது 38) - திருநெல்வேலி மாவட்டம்

4. விக்னேஷ் (வயது 25) - சென்னை மாவட்டம்

5. தங்கமணி (வயது 48) - திருவண்ணாமலை மாவட்டம்

6. அப்பு @ ராஜசேகர் (வயது 31) - சென்னை மாவட்டம்

7. சின்னதுரை (வயது 53) - புதுக்கோட்டை மாவட்டம்

8. தங்கபாண்டி (வயது 33) - விருதுநகர் மாவட்டம்

9. முருகாநந்தம் (வயது 38) - அரியலூர் மாவட்டம்

10. ஆகாஷ் (வயது 21) - சென்னை மாவட்டம்

11. கோகுல்ஸ்ரீ (வயது 17) - செங்கல்பட்டு மாவட்டம்

12. தங்கசாமி (வயது 26) - தென்காசி மாவட்டம்

13. கார்த்தி (வயது 30) - மதுரை மாவட்டம்

14. ராஜா (வயது 42) - விழுப்புரம் மாவட்டம்

15. சாந்தகுமார் (வயது 35) - திருவள்ளூர் மாவட்டம்

16. ஜெயகுமார் (வயது 60) - விருதுநகர் மாவட்டம்

17. அர்புதராஜ் (வயது 31) - விழுப்புரம் மாவட்டம்

18. பாஸ்கர் (வயது 39) - கடலூர் மாவட்டம்

19. பாலகுமார் (வயது 26) - ராமநாதபுரம் மாவட்டம்

20. திராவிடமணி (வயது 40) - திருச்சி மாவட்டம்

21. விக்னேஷ்வரன் (வயது 36) - புதுக்கோட்டை மாவட்டம்

22. சங்கர் (வயது 36) - கரூர் மாவட்டம்

23. செந்தில் (வயது 28) - தர்மபுரி மாவட்டம் இவர்களது பெற்றோரிடமும், மனைவி-மக்களிடமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் ஃபோட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும்"

இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags :
AjithkumarAjithkumar CaseBJPnainar nagendranPolicesivagangaTN Police
Advertisement
Next Article