Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பித்தால் 100-வாக்கு கூட பெற மாட்டார்” -சீமான்

07:11 AM Apr 11, 2024 IST | Web Editor
Advertisement

அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பித்தால் 100-வாக்கு கூட பெற மாட்டார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

Advertisement

ஈரோடு பாராளுமன்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து நாம்
தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னிமலை கிழக்கு ராஜ
வீதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய சீமான்,  “சிவன் மலைக்கும் சென்னி மலைக்கும் இடையே 19வயதில் மாபெரும் படை வைத்து ஆங்கிலேயர் எதிர்த்துப் போராடியவர் தீரன் சின்னமலை அதே வழியில் வந்த தமிழ் இனத்தில் ஒருவனுக்குக் கூடவா தமிழகத்தினை ஆள ஆள் இல்லை?....
நாம் தமிழர் கட்சிக்கு ஒரு எதிரி கிடையாது சுற்றிலும் எதிரிகள் உள்ளது. காங்கிரஸ், திமுக பாஜக அதிமுக ஆகிய நான்கு கட்சிகள் கோட்பாடும் தமிழ் சமூகத்திற்கு எதிரானது. இதனை கவனத்தில் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

50 ஆண்டுகளாக ஆண்ட திராவிட கட்சிகளால் என்ன நிகழ்ந்துள்ளது?... தமிழகத்தில் தமிழ்
மொழி இருக்கிறதா?... தாய் மொழி அழிக்க கொடுத்த இனம் வாழ்ந்து இருக்கிறதா?...
தாய்மொழி சிதைந்து அழிவது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இந்தியை திணித்து போது எதிர்த்தோம், வட இந்தியர்களை மெல்ல மெல்ல திணித்து வருகிறார்கள்.

எதிலும் கலப்படத்தை விரும்பவில்லை மக்கள் ஆனால் உயிருக்கு நிகரான மொழியில் பிற
மொழியை கலந்து கலந்து பேசுகிறார்கள். உலகத்தில் எந்த மொழியும் பிற மொழி துணையின்றி வாழும் மொழி தமிழ் மொழி. 5 ஆண்டு போதும் பூமியின் சொர்க்கமாகத் தமிழகத்தினை மாற்றுவோம்.

10 ஆண்டுகள் ஆண்டும் நாட்டை பிச்சைக்காரன் நாடாக மட்டுமே மோடி மாற்றியுள்ளார்.
மக்கள் மத்தியில் இவ்வுள்ள திட்டம் கொண்டு வந்தேன் என்று மோடி செய்தியாளரைச்
சந்திப்பாரா?

ஜாதி மதம் கடவுள் பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களை
பற்றி சிந்திப்பவன் ஜாதி மதத்தை சிந்திக்க நேரம் இருக்காது. இன்னொரு முறை பாஜக கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்திய நாட்டை மறந்து விட வேண்டும். 90 சதவீதம் நாடு ஏற்கனவே விற்கப்பட்டது. அப்போது அதானி அம்பானி ஆகிய இருவரிடமும் தான் நாடு இருக்கும்.

திமுகவை ஸ்டாலினும்,அதிமுகவை எடப்பாடி பழனிசாமியும் கட்சி ஆரம்பத்து இருந்தால்
எத்தனை வாக்கு வாங்கி இருப்பார்கள் அதே போல என்னை போல அண்ணாமலை தனியாக கட்சி ஆரம்பத்து இருந்தால் என்வாயிருக்கும்?... அவர் 100வாக்கு கூட பெற்று இருக்க மாட்டார். அவர் வளர்த்த ஆட்டுக்குட்டி கூட ஓட்டு போட்டு இருக்காது” எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

Tags :
AnnamalaiBJPElection2024Elections 2024Elections with News7 tamilnaam tamilar katchiNTKSeeman
Advertisement
Next Article