“மகாத்மா காந்தியை அறியாத ஆர்எஸ்எஸ்-காரர்களின் அடையாளம்” - பிரதமர் மோடியை சாடிய காங்கிரஸ்!
மகாத்மா காந்தியை உலகம் தெரிந்து கொண்டது காந்தி படம் மூலமாகவே என்று கூறியதன் மூலம் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை நரேந்திர மோடி அழிக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, “உலகின் ஒரு பெரிய ஆன்மா, மகாத்மா காந்தி. இந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியைப் பற்றி உலகிற்கு தெரிவிக்க வேண்டியது நம் பொறுப்பு அல்லவா? அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. என்னை மன்னியுங்கள்.
“திரைப்படம் வெளியாகும் வரை காந்தி பற்றி தெரியவில்லை”https://t.co/WciCN2SiwX | #NarendraModi | #PMOIndia | #Gandhi | #Movie | #Leader | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/62a7nx3SfY
— News7 Tamil (@news7tamil) May 29, 2024
ஆனால் 'காந்தி' திரைப்படம் எடுக்கப்பட்டபோதுதான் முதல் முறையாக அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் உலகில் ஏற்பட்டது. அந்தப் படத்தை நாம் எடுக்கவில்லை. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை உலகம் அறிந்திருக்கிறது. காந்தி அவர்களை விட குறைந்தவர் அல்ல. உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு இதைச் சொல்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
पता नहीं निवर्तमान प्रधानमंत्री कौन सी दुनिया में रहते हैं जहां 1982 से पहले महात्मा गांधी दुनिया भर में नहीं माने जाते थे।
यदि किसी ने महात्मा की विरासत को नष्ट किया है तो वह स्वयं निवर्तमान प्रधानमंत्री ही हैं। वाराणसी, दिल्ली और अहमदाबाद में उनकी ही सरकार ने गांधीवादी…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 29, 2024
நரேந்திர மோடியின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்த தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்,
“மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்கிறார். பதவி விலகும் பிரதமர் எந்த உலகில் வாழ்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. மகாத்மாவின் பாரம்பரியத்தை யாரேனும் அழித்திருந்தால், அது பதவி விலகப்போகும் பிரதமரே. வாரணாசி, டெல்லி மற்றும் அகமதாபாத்தில் உள்ள காந்திய நிறுவனங்களை அவரது சொந்த அரசாங்கம் அழித்துவிட்டது.
மகாத்மா காந்தியின் தேசியத்தை அறியாத ஆர்எஸ்எஸ்காரர்களின் அடையாளம் இதுதான். நாதுராம் கோட்சே காந்திஜியைக் கொன்றது அவர்களின் சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட சூழல்தான். 2024 தேர்தல் மகாத்மா பக்தர்களுக்கும் கோட்சே பக்தர்களுக்கும் இடையே நடந்தது. வெளியேறும் பிரதமர் மற்றும் அவரது கோட்சே பக்தர் தோழர்களின் தோல்வி வெளிப்படையானது"
என்று விமர்சித்துள்ளார்.