"எனது மகன் உடலை வாங்க மாட்டேன்" - கவின் தந்தை சந்திரசேகர் ஆவேசம்!
நெல்லையில் கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை கைது செய்யும் வரை தனது மகன் கவினின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டேன் என அவரது தந்தை சந்திரசேகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று இந்தச் சம்பவம் தொடர்பாக கவினின் தந்தையை கைது செய்ததாகக் காவல்துறை தெரிவித்த நிலையில், கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து ஆறுதல் கூறினர். குற்றவாளிகளைத் தப்ப விடமாட்டோம் என உறுதி அளித்தனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த கவின் தந்தை சந்திரசேகர், அவர்களிடம், அந்தப் பெண்ணின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தேன். கவின் கொலை வழக்கில் உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை கைது செய்தால் தான் எனது மகன் கவின் உடலை பெற்றுக் கொள்வேன், அதுவரை பெற்றுக் கொள்ள மாட்டேன், என்று ஆவேசமாகப் பேசினார்.
மேலும், "எங்கள் கோரிக்கை தாய், தந்தை ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்பதுதான். அதில் ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர். மற்றொருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்," என்றும் சந்திரசேகர் வலியுறுத்தினார். கவின் கொலை வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகி வருவதால், இந்த வழக்கு தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.