பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக டெல்லி செல்லவில்லை - செங்கோட்டையன் பேட்டி!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த 5 ஆம் தேதி நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிமுகவிலிருந்து பரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அதற்கான நடவடிக்கைகளை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் பரவின. இன்று டெல்லி செல்வதற்காக கோவை விமானநிலையத்திற்கு வந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லி செல்வதாக கூறப்பட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் மன அமைதிக்காக ஹரித்துவார் செல்வதாகவும், ராமனை தரிசனம் செய்து விட்டு திரும்ப வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, நாளை எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை. அதிமுக ஒன்றினைய வேண்டும் ,கட்சி வளர வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் பொதுசெயலாளர் எடுத்த முடிவுக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.