"தினகரனின் சொந்த கருத்திற்கு நான் பதில் சொல்ல முடியாது" - நயினார் நாகேந்திரன் பேட்டி!
இமானுவேல் சேகரனாரின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "அதிமுகவை சுக்கு நூறாக பாஜக உடைக்கிறது என்று உதயநிதி கூறியது குறித்த கேள்விக்கு, அதிமுக இன்றும் வலுவாக தான் உள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எங்கள் தோழமைக் கட்சியின் தலைவர் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் ஆரவாரத்தையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். உதயநிதி அவர் கருத்தை சொல்கிறார். அதிமுகவை பாஜக உடைக்க வேண்டிய அவசியம் இன்று தேவை இல்லை.
கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் துணிச்சலாக அமித்ஷாவை சந்தித்து இருக்கிறார் என்று திருமாவளவன் பேசியது குறித்த கேள்விக்கு, சந்திக்க துணிச்சல் எல்லாம் ஒன்றும் தேவையில்லை. அவர் சென்று இருக்கலாம் சந்தித்திருக்கலாம். அதிமுகவில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்ததாக சொல்கிறார். அதில் முழுதான கருத்து எனக்குத் தெரியாது.
பாஜக செய்த அறுவை சிகிச்சையில் அதிமுக ஐசிஐவில் இருக்கிறது உதயநிதி விமர்சனம் குறித்த கேள்விக்கு, 2026க்கு பிறகு யார் ஐசியுக்கு செல்வார்கள் என்பது தெரியும்.
எடப்பாடியை முதல்வர் வேட்பாளரிலிருந்து நீக்கினால் கூட்டணியில் இணைவோம் என டிடிவி தினகரன் கூறியது குறித்த கேள்விக்கு, தினகரன் சொந்த கருத்திற்கு நான் கருத்து சொல்ல முடியாது. அண்ணன் ஓபிஎஸ்யிடம் நான் எந்த நேரமும் பேச தயாராக உள்ளேன். உடனடியாக அவரிடம் பேசுவேன். யாரிடமும்
எந்த கருத்து வேறுபாடும் எனக்கு இல்லை. டிடிவி தினகரனோடு எந்த கருத்து வேறுபாடும் எப்பொழுதும் கிடையாது. நான் பேச தயாராக இருக்கிறேன். நான் ஓபிஎஸ் அண்ணனிடம் பேசுவேன்.
இபிஎஸ் இருக்கும்போது செங்கோட்டையன் உடன் சந்திப்பு இபிஎஸ்க்கு மன வருத்தத்தை ஏற்படுத்தாத கேள்விக்கு, செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்ததால் எங்கள் கூட்டணியில் எந்த இடர்பாடும்
கிடையாது. உள்துறை அமைச்சர் இங்க வந்து சந்தித்தால் தான்.
திமுக வன்மையாக உள்ளது நான் அண்ணாமலை பேசியது கொடுத்த கேள்விக்கு, திமுக வலிமையாக உள்ளது என உதயநிதி பேசியதாக அண்ணாமலை சொல்லி இருக்கிறார்ர் அதை திரித்து பேசுகிறார்கள். திமுக வலுவாக உள்ளதாக அண்ணாமலை சொல்லவே இல்லை.
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, சனிக்கிழமை பற்றி உங்களுக்கு தெரியும் அதைப்பற்றி நான் ஒன்னும் சொல்ல வேண்டாம்.
தனியார் செய்தி இதழில் நயினார் பதவி விலகுவாரா என்ற செய்தி குறித்த கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் பதவி விலக வேண்டிய அவசியம் என்ன வந்துள்ளது. அப்படி ஒரு அவசியம் வரவில்லை பிரதமரும் உள்துறை அமைச்சரும் அகில இந்திய பாஜகவினம் என் மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள். கங்கைகொண்ட சோழபுரத்தில் கூட என் மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளோம் என்று பிரதமர் பேசினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா என் வீட்டிற்க்கே வந்து நலம் விசாரித்து சென்றார். இதில் நான் பதவி விலக வேண்டிய அவசியம் என்ன. சம்மந்தப்பட்ட பத்திரிக்கை மீது நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிக்கை தொழிலை விட வேற ஏதாவது தொழிலை செய்யலாம் இதை விட காட்டமாக என்னால் பேச முடியாது.
செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டால் குறித்த கேள்விக்கு, எங்கள் தலைவர் இபிஎஸ் என்ன சொல்கிறாரோ அதுதான் எங்களிடம் பிளவு என்பது கிடையாது. நீங்கள் ஏன் பிளவுபடுத்த நினைக்கிறீர்கள். ஏற்க முடிந்த நிபந்தனைகளை ஏற்கலாம் இன்னும் எட்டு மாதம் தேர்தலுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.