"விஜயை பூமர்னு சொன்னால் எப்படி இருக்கும்?" - அண்ணாமலை அதிரடிப் பேட்டி!
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு குறித்துக் கருத்து தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "எல்லாருக்கும் தாய்மாமன்" என்று விஜய் பேசியதை விமர்சித்தார். "கடந்த 50 வருடங்களாக அந்தத் தாய்மாமன் எங்கே சென்றார்? எத்தனை சகோதரிகளுக்குச் சீர் செய்தார்? அவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் காசு கொடுத்துதானே டிக்கெட் வாங்குகிறார்கள்? முதலமைச்சரை மேடையில் வைத்து 'அங்கிள்' என்று விஜய் பேசியது நாகரிகமற்றது.
51 வயதில் பூமர் மாதிரி பேசுகிறீர்கள் என்று கூறினால் விஜய்யின் மனம் கஷ்டப்படாதா?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
இந்தக் கருத்துக்கள், விஜய்யின் அரசியல் பேச்சுக்களுக்கும், பாஜகவின் நிலைப்பாட்டிற்கும் இடையே உள்ள அரசியல் வேறுபாடுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. அண்ணாமலையின் இந்த விமர்சனங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.