For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"511 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றி உள்ளீர்கள்" - அண்ணாமலை!

மத்திய அரசு மீது பழி போடாமல் சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
06:55 AM Jul 28, 2025 IST | Web Editor
மத்திய அரசு மீது பழி போடாமல் சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 511 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றி உள்ளீர்கள்    அண்ணாமலை
Advertisement

சென்னை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வந்து கலை, கலாச்சார பண்பாட்டு மையத்தை பார்த்து விட்டு சாமியை தரிசனம் செய்தார். கங்கை கொண்டான் நாணயத்தை வெளியிட்டார். பிரதமரின் வருகை வரலாற்று முக்கியத்துவமிக்கது. நல்ல மாவட்டமான அரியலூர் பின் தங்கி உள்ளது. ஆட்சியாளர்கள் ஏதோ காரணமாக அரியலூர் மாவட்டத்தில் தனி கவனம் செலுத்தவில்லை. பிரதமரின் வருகையால் அரியலூர் பெருமை தமிழகத்தின் பெருமையாக பார்க்கிறோம். சோழபுரம் ஊரின் நிலைமை மாறும்.

Advertisement

இந்தியா இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க போகிறது. உலகத்தின் 4வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். வாரணாசி எம்.பியாக பிரதமர் உள்ளது காசி தீர்த்ததுடன் கோவிலுக்கு வந்தார்கள். கங்கையும், காவிரியும் கலப்பதாக பார்க்கிறேன். தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை தொடங்கப்பட்டது. உடனடியாக டெல்லி, மும்பைக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக விமான போக்குவரத்து மந்திரி கூறினார். தூத்துக்குடி மக்களின் கனவு நிறைவேறி உள்ளது. ஒ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க் அனுமதி கேட்டு இருந்தாரா என்பது எனக்கு தெரியாது.

நாங்கள் சாதாரண தொண்டர்கள் தான். தமிழகத்தின் மீதான் அன்பை பிரதமர் எங்கள் தோளை தட்டி சொல்வார். பிரதமரை அருகில் இருக்கிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக தொண்டர்கள் தள்ளி இருக்கிறார்கள். தொண்டர்கள் மீதான அன்பை தான் எங்கள் மீது காட்டுகிறார். நதி நீர் இணைப்பு என்பது பாஜக நிலைப்பாடு. நிச்சயமாக அதை செய்து காட்டுவோம். நதி நீர் இணைக்க மட்டோம் என்று சொல்வதில்லை.

கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு முக்கியமாக இருக்கிறது. வட இந்தியாவில் ஒவ்வொரு வெள்ள பெருக்கு ஏற்படும் போது இரண்டரை லட்சம் கோடி மக்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் வறட்சி ஆரம்பித்து விட்டது. மாநிலத்தில் உற்பத்தி ஆக கூடிய பெரிய நதி எதுவும் இல்லை. கோதாவரி - காவிரி இணைப்பு
நிச்சயமாக இணைக்கப்பட வேண்டும். இது பிரதமர் மோடியால் மட்டும் தான் நடக்க முடியும். விவசாயிகள் சிபில் ஸ்கோர் குறித்து எதிர்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்தார். இது பற்றி மத்திய அரசு பரிசிலித்து கொண்டு தான் வருகிறது. வங்கிகள் தான் போடுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை வருமானம் வரக்கூடிய விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் போட முடியாது.

2 மாதங்களாக மக்களை சந்தித்து பணிகளை செய்து வருகிறேன். தேசிய கட்சி தலைவர் தேர்தல், மாநில நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. பொறுப்பு என்பது நிலை இல்லாதது. பொறுப்பு மாறிக் கொண்டு இருக்கும். பொறுப்பு இல்லாததால் வேலையை குறைத்து கொண்டோம் என்ற பேச்சுக்கிடமில்லை. கட்சி எந்த பொறுப்பு கொடுத்தாலும் செய்ய வேண்டும்.

முதலமைச்சர் டிஸ்சார்ஜ் வீட்டிற்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. மருத்துவமனையில் ஆய்வு செய்கிறார். 4 ஆண்டுகள் முடிந்த உள்ள என்ன செய்து உள்ளீர்கள் என்ற ரிப்போர்ட் கார்ட்டை கொடுக்க வேண்டும். மத்திய அரசு மீது பழி போடாமல் சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட வேண்டும். 511 தேர்தல்
வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றி உள்ளீர்கள் என்பதை சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement