For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Haryana சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை | இந்தியா கூட்டணி முன்னிலை!

09:26 AM Oct 08, 2024 IST | Web Editor
 haryana சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை   இந்தியா கூட்டணி முன்னிலை
Advertisement

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.

Advertisement

மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 67.90% வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த 2 கட்சிகள் தவிர இந்திய தேசிய லோக் தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணியும், ஜனநாயக ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் களத்தில் உள்ளன. காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஆம் ஆத்மி கட்சி தனித்து களமிறங்கியது.

90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

இந்நிலையில், ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதன்படி, இந்தியா கூட்டணி கட்சிகள் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றன. குறிப்பாக ஹரியானா ஜூலானா தொகுதியில் காங். சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத் முன்னிலை வகிக்கிறார். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 55 தொகுதிகளிலும், பாஜக 24 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது.

ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் பிற்பகலில் முடிவுகள் தெரியும். ஹரியானாவில் ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் என்ற நம்பிக்கையில் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் காலை முதலே தொண்டர்கள் மேள, தாளம், இனிப்புகளுடன் தொண்டர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement