புத்தாண்டு 2024 - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது குறித்து காணலாம்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
"மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும், அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்"
மலருகின்ற புத்தாண்டில்,
மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல
இறைவனை மனதார பிரார்த்தித்து,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,
புரட்சித்… pic.twitter.com/a3z2QCooH6— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 31, 2023
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கை சீற்றங்களால் நாம் சந்தித்த இடர்களைக் கடந்து 2024 புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராவோம். அன்பையும் வாழ்த்துகளையும் அனைவரோடும் பரிமாறிக் கொள்வோம்.
ஒற்றுமை உணர்வோடும் சமத்துவச் சிந்தனையோடும் பாரத தேசம் உலக அரங்கில் பீடுநடை போடும் வகையில் கடமையாற்ற உறுதி ஏற்போம் இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்"
மநீம தலைவர் கமல்ஹாசன்
"பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம்; புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
"கடந்துபோன 2023-ம் ஆண்டின் கடைசி மாதங்களில் இயற்கையின் கோர தாண்டவம் தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது.மலரப் போகிற 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது.
இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்போம், கூட்டாட்சிக் கொள்கையைக் காப்போம், மதச்சார்பின்மையைக் காப்போம் என சூளுரைத்து அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்"
சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
"சிபிஎம் கட்சி சார்பில் தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்; மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறோம்"