For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்!

03:41 PM Apr 04, 2024 IST | Web Editor
பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்
Advertisement

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த கவுரவ் வல்லப் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 

Advertisement

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த கவுரவ் வல்லப் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.  காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அதன் தேசிய பொதுச் செயலாளர் வினேத் தாவ்டே முன்னிலையில் அவர் பாஜக-வில் இணைந்தார்.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், காங்கிரஸ் கட்சி திசையில்லா பாதையை நோக்கி செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.  சனாதனத்துக்கு எதிரான கருத்துகள் கூறவோ,  நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்பவர்கள் குறித்து அவதூறு கூறவோ முடியாது.  எனவே தனது பதவியை ராஜிநாமா செய்வதாகவும்,  கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags :
Advertisement