டெல்லி முதலமைச்சர் வாள் சுழற்றியது முதல் யமுனா நதியை பாஜக அரசு சுத்தம் செய்ததாக வைரலாவது வரை - 5 முக்கிய உண்மை சரிபார்ப்புகள்!
This News Fact Checked by ‘The Quint’
டெல்லி முதல்வர் ரேகா குப்தா பற்றிய தவறான கூற்றுகள் முதல் யமுனா நதியை தற்போதைய பாஜக அரசு சுத்தம் செய்ததாக பரவும் செய்திகள் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி பற்றிய தவறான தகவல்கள் வரை, தி குயிண்டின் போலிச் செய்திகளையும் அதன் உண்மைத்தன்மையையும் விரிவாக காணலாம்.
1. டெல்லி முதலமைச்சர் வாள் சுழற்றுவதாக வைரலாகும் வீடியோ உண்மையா?
இல்லை, இந்த வீடியோவில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வாளை ஏந்தியிருப்பதை வைரலாவது தவறாக பகிரப்படுகிறது. தற்போதைய டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது இளமைக் காலத்தில் வாளை ஏந்தியிருப்பதைக் காட்டும் ஒரு பெண்ணின் வீடியோ கிளிப் ஆன்லைனில் பரவி வருகிறது. இந்தக் கூற்று தவறானது. இந்த வீடியோவில் பாலிவுட் நடிகை பாயல் ஜாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த குயிண்டின் செய்தி அறிக்கையை இங்கே படிக்கலாம்
2. '42 வயது' ஜாமியா மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டாரா?
புது தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிஎச்டி மாணவி ஜோதி இடம்பெறும் ஒரு காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனக்கு அவர் 42 வயது என்று தெரிவித்திருப்பார். அவர் சமீபத்தில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பதையும் அந்தக் கூற்று சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும், இந்தக் கூற்று தவறானது என்பதை கண்டறிந்தது. WebQoof குழு ஜோதியைத் தொடர்பு கொண்டது, இந்தக் கூற்று தவறானது என்பதை அவர் எங்களுக்கு உறுதிப்படுத்தினார். அவர் 1997 இல் பிறந்தார், மேலும் அவரது வயது கூறப்படுவது போல் 42 அல்ல, 27 ஆகும்.
இது தொடர்பாக முழு செய்தியையும் படிக்க இங்கே காணலாம்.
3. பிரதமரின் நேரடி கண்காணிப்பின் கீழ் எஸ்சி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு மட்டும் இலவச பயிற்சி ம்த்திய அரசு அளிக்கிறதா?
பட்டியல் சாதி (SC) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (OBC) மாணவர்களுக்கு மட்டுமே PM CARES மூலம் அரசாங்கம் இலவச பயிற்சியை வழங்குவதாகக் கூறும் ஒரு கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட் ஆன்லைனில் பரவி வருகிறது.
PM CARES திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும், SC மற்றும் OBC சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் பயிற்சி வழங்குவதற்கான திருத்தப்பட்ட முயற்சியை அரசாங்கம் தொடங்குவது குறித்து அந்தக் கட்டுரை விவாதித்தது.
இதுகுறித்து ஆய்வு செய்ததில் குழந்தைகளுக்கான PM CARES திட்டத்திற்கு சாதி அல்லது வருமானத்தின் அடிப்படையில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்பது தெளிவாகிறது.
இது தொடர்பான கட்டுரையை காண இங்கே படியுங்கள் .
4. துபாயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு கணேஷ் ஆர்த்தி எடுக்கப்பட்டதா?
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை இந்தியா வென்றதைத் தொடர்ந்து மைதானத்தில் விநாயகர் ஆரத்தி எடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வைரல் காணொலியில் இரண்டு பழைய மற்றும் தொடர்பில்லாத கிளிப்புகள் உள்ளன.
ஜனவரி 19 அன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் அதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது கணேஷ் ஆரத்தியின் முதல் காணொலி படமாக்கப்பட்டது.
இரண்டாவது காணொலி, இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் படமாக்கப்பட்டது, இது பிப்ரவரி 12 தேதியிட்டது.
இதுகுறித்த உண்மைச் சரிபார்ப்பை காண இங்கே படியுங்கள் .
5. யமுனா நதியை தற்போதைய பாஜக அரசு தூய்மைப்படுத்தியதாக பரவும் காணொலி உண்மையா?
யமுனை நதியை சுத்தம் செய்யும் பல நபர்களைக் காட்டும் ஒரு வைரல் வீடியோ வைரலாகி வருகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) தான் இந்த முயற்சிக்குக் காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூற்று தவறானது, ஏனெனில் இந்த காணொலி டெல்லி தேர்தல் முடிவுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இந்த காணொலியில், எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லாத டெல்லியைச் சேர்ந்த தன்னார்வலர் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட யமுனாவை சுத்தம் செய்யும் முயற்சிதான் இடம்பெற்றுள்ளது.
இந்த செய்தி அறிக்கையினை இங்கே படியுங்கள் .
Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.