For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஜூலை 30ஆம் தேதி குண்டுவெடிப்பு நடக்கும்... அன்று உங்களை கொல்லுவோம்” - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்!

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
12:00 PM May 23, 2025 IST | Web Editor
முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
“ஜூலை 30ஆம் தேதி குண்டுவெடிப்பு நடக்கும்    அன்று உங்களை கொல்லுவோம்”   அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி  வேலுமணிக்கு கொலை மிரட்டல்
Advertisement

கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஜூலை 30ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தபட உள்ளதாகவும், அதில் எஸ்.பி.வேலுமணியை கொலை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டு, கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Advertisement

மேலும் குறிப்பிட்ட இடத்தில் ஒருகோடி ரூபாய் பணத்தை வைக்கவேண்டும்.  இல்லை என்றால், மூன்று மாதத்தில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவை புறநகர் மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமோதரன் தலைமையில், மாநகர காவல் ஆணையாளரிடம் புகாரளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement