For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திரிணாமுல் காங்கிரஸை தொடர்ந்து ஆம் ஆத்மியும் அதிரடி அறிவிப்பு! பஞ்சாப்பில் தனித்து போட்டி என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு!

04:37 PM Jan 24, 2024 IST | Web Editor
திரிணாமுல் காங்கிரஸை தொடர்ந்து ஆம் ஆத்மியும் அதிரடி அறிவிப்பு  பஞ்சாப்பில் தனித்து போட்டி என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு
Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் வரவுள்ள மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், இதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து 'INDIA’ கூட்டணியை உருவாக்கினார்கள். ஆனால், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் 'INDIA’ கூட்டணி கட்சிகள் இறுதி முடிவை எடுப்பதில் தாமதம் நீடித்தது.  இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று (24.01.2024) அளித்தப் பேட்டியில், “வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும். இதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை நேசிக்கிறார்கள். அவர்கள் ஆம் ஆத்மிக்கு 92 சட்டசபை இடங்களை வழங்கியுள்ளனர். பஞ்சாபில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் ஆம் ஆத்மி கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முன்மொழிவுக்கு கேஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இரண்டு மாநில முதல்வர்களின் இந்த நகர்வு, ‘'INDIA’’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நான் ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று கூறி வந்தேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் மதசார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்போம். நாங்கள் அவர்களுக்கு (காங்கிரஸ்) கொடுத்த அனைத்து முன்மொழிவுகளையும் அவர்கள் நிராகரித்தார்கள். அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் முடிவை நாங்கள் எடுத்தோம்” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி 'INDIA’ கூட்டணியில் உள்ள 2 முக்கிய கட்சிகள் தங்களது மாநிலங்களில் தனித்து போட்டி என கூறியீருப்பது 'INDIA’ கூட்டணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement