Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#FakeCourt | "யாரு சாமி நீங்க"... போலி நீதிமன்றம் நடத்தி மாவட்ட ஆட்சியருக்கே உத்தரவு போட்ட இளைஞர் - எங்கு தெரியுமா?

04:13 PM Oct 22, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத்தில் இளைஞர் ஒருவர் போலி நீதிமன்றம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

போலி அரசு அலுவலகம், போலி டோல் கேட்களை அமைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் ஒருவர் போலியாக நீதிமன்றம் ஒன்றையே நடத்தியிருக்கிறார். போலி நீதிமன்றம் நடத்திய மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன், கடந்த சில ஆண்டுகளாகப் பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார். இந்த சூழலில், அகமதாபாத் நகர சிவில் நீதிமன்றப் பதிவாளர் கிறிஸ்டியன் மீது புகார் அளித்திருக்கிறார். தொடர்ந்து, போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலத்தகராறு தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை முதலில் கிறிஸ்டியன் சேகரிப்பாராம். தொடர்ந்து, குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் பிரச்னையை முடித்துத் தருவதாகச் சொல்லி மோசடி செய்துள்ளார். பின்னர் வழக்கு தொடுத்தவரைத் தொடர்பு கொள்ளும் அவர், உங்கள் பிரச்னையைச் சரி செய்ய அரசு தன்னை நியமித்துள்ளதாகக் கூறிக்கொள்வார். பிறகு இரு தரப்பினரையும் காந்தி நகரில் உள்ள தனது ஆபீசுக்கு அழைத்துள்ளார். அந்த அலுவலகம் பார்க்க அப்படியே நீதிமன்றத்தைப் போல வடிவமைக்கப்பட்டு இருந்துள்ளது.

அங்கு வழக்கு விசாரணை போல ஒன்றை நடத்தி, யார் தனக்குப் பணம் கொடுத்தாரோ அவருக்குச் சாதகமான தீர்ப்பைக் கொடுப்பது மோசடி செய்து இருக்கிறார். அவரது கூட்டாளிகள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போல நடித்துள்ளனர். இதனால் அங்கு வந்த அனைவரும் அதனை உண்மையான நீதிமன்றம் என்றே நம்பி ஏமாந்துள்ளனர். கடந்த 2019ல் கிறிஸ்டியன் அரசு நிலம் தொடர்பான வழக்கில் தனக்குப் பணம் தந்த நபருக்கு ஆதரவான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

அதாவது பால்டி பகுதியில் உள்ள அரசு நிலம் தன்னுடையது என்றும் இதனால் வருவாய் பதிவேடுகளில் தனது பெயரைச் சேர்க்க வேண்டும் என்றும் ஒருவர் வழக்குப் போட்டுள்ளார். அந்த நபரைத் தொடர்பு கொண்ட கிறிஸ்டியன் பிரச்னையை முடித்துத் தருவதாகப் பணம் வாங்கியுள்ளார். இதனையடுத்து, இவரது பெயரை வருவாய் பதிவேடுகளில் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு கிறிஸ்டியன் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நிற்காமல் தனது போலியான உத்தரவை மற்றொரு வழக்கறிஞர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கே அனுப்பியுள்ளார். அந்த உத்தரவு போலி என்பதும், அவர் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Tags :
ArrestcourtGujaratnews7 tamilPolice
Advertisement
Next Article