For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்க வேண்டும்" - இபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
01:59 PM Mar 16, 2025 IST | Web Editor
 தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்க வேண்டும்    இபிஎஸ் வலியுறுத்தல்
Advertisement

ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் ஆர்.ஆர்.பி. எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பதவிக்கான ஆட்சேர்ப்பு பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 493 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 6,315 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement

தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தக் கட்டமாக, 2-ம் நிலை தேர்வு 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். 1,000 கிலோமீட்டர் தொலைவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. 1000 கி.மீ. க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்.

மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement