For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆசிய இளையோர் கபடி : தங்கம் வென்ற தமிழக வீரர்களை வாழ்த்திய முதலமைச்சர்..!

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகா, அபினேஷ் ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
04:22 PM Oct 26, 2025 IST | Web Editor
ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகா, அபினேஷ் ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
ஆசிய இளையோர் கபடி   தங்கம் வென்ற தமிழக வீரர்களை வாழ்த்திய முதலமைச்சர்
Advertisement
பஹ்ரைனில் மூன்றாவது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் கபடி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும்   பெண்கள் அணிகள் தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று தாயகம் திரும்பிய இருவருக்கும் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க  ஸ்டாலின்  கார்த்திகா மற்றும் அபினேஷ் ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.
கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார். கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம். நேற்று நான் பைசன் படத்தில் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Tags :
Advertisement