"வாக்கு மோசடி குறித்து விரைவில் ஆதாரங்கள் வெளியிடப்படும்" - ராகுல் காந்தி!
டெல்லியில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "வாக்கு திருட்டு எப்படி நடைபெற்றது, எத்தனை வாக்குகுள் நீக்கப்பட்டனர் உள்ளிட்டவை குறித்து விளக்குகிறேன். "யாரோ ஒருவர்" இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான வாக்காளர்களை நீக்குவதற்கு திட்டமிட்டு குறிவைத்து வருகிறார்.
நாடு முழுவதும் தேர்தல்கள் நடைபெறும் போது லட்சக்கணக்கான வாக்காளர்களின் விவரங்கள் அழிக்க யாரோ ஒருவர் முயற்சி செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் 2023ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது ஆலந்த் எனும் சட்டமன்ற தொகுதியில் 6,018 வாக்காளர்களை யாரோ ஒருவர் நீக்கம் முயற்சி செய்துள்ளனர். அதேவேளையில் பல மாநிலங்களை சேர்ந்த நபர்கள் வேண்டுமென்றே கர்நாடக வாக்காளர் பட்டியலில் சேக்கப்பட்டார்கள். தனி நபர் ஒருவர் தனது அடையாளத்தை பயன்படுத்தி 14 நிமிடங்களில் 12 வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார்.
வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறவில்லை, மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? என கண்டறிந்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான எதிர்க்கட்சிகளின் வாக்குகள் நீக்கப்படுகின்றன. இதற்கான உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
நான் எனது நாட்டையும் அதன் ஜனநாயகத்தையும் நேசிக்கிறேன், அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறேன். நவீன கணிப்பொறிகள், செயலிகள் கொண்டு வாக்கு திருட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம், அதை தேர்தல் ஆணையம் இதுவரை கொடுக்கவில்லை.
ஏனெனில் அந்த விவரம் கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுப்பட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். இதில் சம்மந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார். இணையதள மென்பொருள் மூலம் திட்டமிட்டு பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது ஒரு கால் சென்டர் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்கு பதிவாகும் என்ற வாக்குச்சாவடிகளை குறிவைத்து இந்த பெயர் நீக்கம் நடந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் 18 மாதங்களில் 18 முறை கர்நாடகா போலீசார் ஆவணங்கள் கேட்டும் பலன் இல்லை. கர்நாடகாவில் புகார் பதிவு செய்யப்பட்டது. கர்நாடகா மாநில காவல்துறை சி.ஐ.டி பிரிவு தேர்தல் ஆணையம் விபரங்களை வழங்க மறுக்கிறது. குற்றவாளிகளை தேர்தல் ஆணையத்துக்கு தெரியும். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தவறு செய்தவர்களை பாதுகாக்கிறார். மகாராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங்களில் மோசடி நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் 9850 வாக்குகள் ஒரு தொகுதியில் நீக்கப்பட்டன.
கால் சென்டர் மூலம் மென்பொருளை பயன்படுத்தி வாக்கு மோசடி செய்துள்ளனர். அவர்களின் விபரங்களை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தும் கர்நாடகா போலீசாருக்கு வழங்க வலியுறுத்தியுள்ளோம். தலைமை தேர்தல் ஆணையர் முறைகேடு செய்தவர்கள் குறித்த முழு விபரங்களை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் சிஸ்டமேட்டிக்காக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது. இதை ஆதாரபூர்வமாக நிரூபித்து உள்ளேன். இனி இந்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை 100% ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன். இனி நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
மாநிலத்துக்கு வெளியில் இருந்து இந்த வாக்காளர் பெயர் நீக்கம் செய்யும் ஆபரேஷன் திட்டத்தை செயல்படுத்தியவர்கள் யார்? அவர்களுக்கு ஓ.டி.பி எப்படி அனுப்பப்பட்டது. அந்த மொபைல் ஐ.எம்.இ.ஐ எண் என்ன என்பது தேர்தல் ஆணையத்துக்கு தெரியும். வாக்கு திருட்டு நடப்பதும், அதை யார் நடத்துவது, எங்கிருந்து நடத்துகிறார்கள் என அனைத்து தகவல்களும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமாருக்கு தெரியும்.
ஆனால், பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்க அவர் அதை அனுமதித்தார். தகவல்கள் வெளி வந்ததும் அதனை மறைக்கிறார். ஜனநாயகத்தை அழிப்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தடுத்து நிறுத்த வேண்டும். மையமான ஒரு இடத்தில் இருந்து இந்த வாக்கு திருட்டு மோசடிகள் நடக்கின்றன.
உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடந்துள்ளது. வாக்கு திருட்டு குறித்து தொடர் ஆய்வுகளை காங்கிரஸ் நடத்தி வருகிறது. விரைவில் ஹைட்ரஜன் குண்டு போன்ற ஆதாரங்கள் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.