For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஈரோடு:  கல்லூரி அருகே குட்கா விற்பனை | 3 பேர் கைது!

10:18 AM Nov 27, 2023 IST | Web Editor
ஈரோடு   கல்லூரி அருகே குட்கா விற்பனை   3 பேர் கைது
Advertisement

ஈரோடு அருகே கல்லூரிகள் நிறைந்த பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

தமிழ்நாடு அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடைவிதித்ததுடன்
பள்ளி மற்றும் கல்லூரி உள்ள பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும்
தடைவிதித்து உள்ளது.  இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை
வாய்க்கால்மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த
கல்லூரியில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஏற்கெனவே இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் புகையிலை, குட்காவுக்கு அடிமையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையும் படியுங்கள்: மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்!

இந்த நிலையில் இந்த கல்லூரிகள் அருகே தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இந்த தகவலின் அடிப்படையில் பெருந்துறை காவல்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது வாய்க்கால்மேடு பகுதியில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.2.10 லட்சம் ரொக்கமும், 37 கிலோ குட்கா பொருட்களையும், ஒரு இரண்டு சக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பெருந்துறை பிச்சாண்டம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்வர்டு, அவரது அண்ணன் மகன் அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.  பின்னர் அவர்களை பெருந்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags :
Advertisement