இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாள் ..."தியாகத்தையும், இன விடுதலை உணர்வையும் போற்றுவோம்" - அன்புமணி ராமதாஸ்!
இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாளில் அவரது தியாகத்தையும், இன விடுதலை உணர்வையும் போற்றுவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
04:23 PM Oct 09, 2025 IST | Web Editor
Advertisement
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாளில் அவரது தியாகத்தையும், இன விடுதலை உணர்வையும் போற்றுவோம்.
Advertisement
தீண்டாமையை ஒழிக்க வேண்டும், சமூகங்களுக்குள் இணக்கம் வேண்டும் என்பதற்காக தமது வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் 102-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரை வணங்குகிறேன். சமூக விடுதலைக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்த நாளில் அவரது விடுதலை உணர்வையும், தியாகத்தையும் நாம் அனைவரும் போற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அவர் எந்த இலக்கை அடைய பாடுபட்டாரோ, அந்த இலக்கை அடைவதற்காக உழைக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.