Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"Drive to Survive” - கால்டாக்ஸி ஓட்டுநரின் குடும்பத்துடன் உணவருந்திய #RahulGandhi!

09:07 PM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கால்டாக்ஸி ஓட்டுநருடன் காரில் சென்று அவரது குடும்பத்துடன் ஹோட்டலில் உணவருந்தி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

இதுகுறித்த வீடியோவை மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராகுல் காந்தியின் செயலை பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். கால்டாக்ஸி ஓட்டுநர் சுனில் உபாத்யாய் ஜியுடன் அவரது மனைவியும் இரு மகள்களும் ராகுல் காந்தியுடன் உரையாடி மகிழ்ந்தனர்.

அந்த பதிவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, “குறைந்த வருமானம், விலைவாசி உயர்வு மக்களை அழிக்கிறது. கால் டாக்ஸி ஓட்டுநர்கள், உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிய முடிந்தது. ’கைக்கும் வாய்க்கும் மட்டுமே போதுமானதாக உள்ள குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தும்’ இத்தகைய தொழிலாளர்களின் வாழ்க்கை மிகுந்த சிரமத்தில் உள்ளது.

எவ்வித சேமிப்பும் இல்லை, குடும்பத்தின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்க முடியாத சூழலில் வாழ்கின்றனர். காங்கிரஸ் அரசு நிலையான கொள்கைகளால் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும். இந்தியா கூட்டணியின் சொந்தங்கள் முழுவீச்சில் நாடெங்கிலும் போராட்டத்தை விரிவாக்க செயல்படும் ” என சாமானிய மக்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல் எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Cab DriverCongressINCINDIA AllianceNews7Tamilnews7TamilUpdatesRahul gandhi
Advertisement
Next Article