For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”திமுகவினர் செய்யும் பாவத்திற்கு துணை போக வேண்டாம்”- திருமாவளவனுக்கு பழனிசாமி அறிவுரை!

திமுகவினர் செய்யும் பாவத்திற்கு துணை போக வேண்டாம் என்று விசிக தலைவர் திருமாவளவனுக்கு அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.
09:38 PM Aug 18, 2025 IST | Web Editor
திமுகவினர் செய்யும் பாவத்திற்கு துணை போக வேண்டாம் என்று விசிக தலைவர் திருமாவளவனுக்கு அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.
”திமுகவினர் செய்யும் பாவத்திற்கு  துணை போக வேண்டாம்”  திருமாவளவனுக்கு பழனிசாமி அறிவுரை
Advertisement

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம், என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்தார்.

Advertisement

பின்னர் பேசிய அவர்,,”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. திமுக ஆட்சியில் மருத்துவமனை மூலம் உடல் உறுப்புகளை திருடும் சம்பவம் நடைபெற்று வருகிறது எவருக்கும் அஞ்சாத தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக கருணாநிதி அவர்களை கண்ட அதிமுக ஸ்டாலின் எந்த அளவு எங்களுக்கு..?” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “திருமாவளவன் அவளே நீங்கள் எந்த அளவிற்கு திமுகவிற்கு முட்டுக் கொடுத்தாலும் திமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறாது
உங்களுக்கு  தமிழகத்தில் நல்ல பெயர் உள்ளது திமுகவினர் செய்யும் பாவத்திற்கு நீங்கள் துணை போக வேண்டாம்.

ஒரு திறமையற்ற முதலமைச்சர் தற்போது இது தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றார். திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டில் போதை பொருள் தமிழகத்தில் பெருக்கெடுத்துவிட்டது. போதை பொருள் இல்லாத தமிழகமே இல்லை. இதனால் இளைஞர்கள் மாணவர்கள் பொதுமக்கள் சீரழிந்து வருகின்றனர். போதையின் பாதையில் செல்லாதீர் என்று சொல்லும் முதல்வர் அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்.
அதிமுக அமைந்த உடன் தமிழகத்தில் போதை பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

ஏழை மாணவர்கள் முன்னேற 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பு பயலும் மாணவர்கள் திட்டம் கொண்டு வந்தது அதிமுக அரசு.
.பத்து ரூபாய் அமைச்சர் நிர்ணயம் செய்த பத்து ரூபாய் இன்றும் டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்து வருகின்றனர். திமுகவினர் கனிம வள கொள்ளையில் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சி அமைந்த உடன் 4000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும். தாலிக்கு தங்கம் மீண்டும் வழங்கப்படும்.மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்த உடன் திமுக ஆட்சியில் நிறுத்திய திட்டங்கள் அனைத்தும் மீண்டும் தொடரும்.” என்று பேசி முடித்தார்.

Tags :
Advertisement