For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புரோ கபடி லீக் | தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது புனேரி பால்டன்!

புரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி புனேரி பால்டன்ஸ இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
06:34 AM Oct 30, 2025 IST | Web Editor
புரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி புனேரி பால்டன்ஸ இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
புரோ கபடி லீக்   தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது புனேரி பால்டன்
Advertisement

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டத்தில் 12 அணிகள் பங்கேற்ற நிலையில் புனேரி பால்டன், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய 8 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. தமிழ் தலைவாஸ் உள்பட 4 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

Advertisement

தொடர்ந்து, நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த புனேரி பால்டன் அணி 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து, இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின.

இதில், சிறப்பாக ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-39 என்ற கணக்கில் பாட்னா பைரட்ஸை வீழ்த்தியது. இதனால் பாட்னா பைரேட்ஸ் வெளியேறியது. தொடர்ந்து, நேற்று நடைற்றம் 2வது தகுதி சுற்றில் புனேரி பால்டனை தெலுங்கு டைட்டன்ஸ் சந்தித்தது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் புள்ளிகளை அள்ளிக் குவித்தனர்.

எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இறுதியில் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய புனேரி பால்டன் அணி 50-45 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த வகையில், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி - புனேரி பால்டன் அணிகள் மோதுகிறன்றன.

Tags :
Advertisement