For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நான் CBSE பள்ளி நடத்துறேனா?" - அண்ணாமலைக்கு திருமாவளவன் எம்.பி. பதில்!

08:52 PM Feb 20, 2025 IST | Web Editor
 நான் cbse பள்ளி நடத்துறேனா     அண்ணாமலைக்கு திருமாவளவன் எம் பி  பதில்
Advertisement

சென்னை வேளச்சேரியில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளியின் நிர்வாகக் குழு தலைவராக விசிக தலைவர் திருமாவளவன் இருக்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில், இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து பேசியதாவது,

Advertisement

"யாரும் எந்த மொழியும் கற்றுக்கொள்ளலாம். எந்த மொழியிலும் தங்களுடைய திறமையை யாரும் வளர்த்துக் கொள்ளலாம், அதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒரே தேசம்; ஒரே கலாச்சாரம் என்பது அவர்களின் நிலைப்பாடு என்பதைப் போல ஒரே தேசம்; ஒரே மொழி என்பதும் அவர்களின் நிலைப்பாடுதான். அரசுப்பள்ளி மாணவர்கள் 3வது மொழி கற்க விரும்பினால் அவர்கள் தனியாக கற்று கொள்ளலாம்.

இந்தியாவில் பல மொழிகளை பேசக்கூடிய பல தேசிய இனங்கள் உள்ளோம். இந்தியே தேசத்தின் ஒற்றை மொழியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்தி போல தமிழும் பிராந்திய மொழி தான். பிராந்திய மொழி எப்படி தேசிய மொழி ஆக முடியும்? தனியார் பள்ளியில் இந்தியை கற்றுக்கொடுப்பது வேறு, அரசே திணிப்பது வேறு. இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கட்டட வேலை பார்க்கிறார்கள்.

அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசிக்கொண்டு இருக்கிறார். இரட்டை வேடம் போடக்கூடிய நிலை எனக்கு இல்லை. தமிழ்நாட்டிற்கு சமக்ரா சிக்ஸான் என்ற திட்டத்திற்கு ஏன் நிதி தர வில்லை? அது குறித்தெல்லாம் அண்ணாமலை பேச மாட்டார். உண்மையில் அண்ணாமலை அக்கறை உடையவராக இருந்தால் ஏன் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப் கொடுக்க வேண்டும் என போராடவில்லை.

எந்த மொழி மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை, ஏன் இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் இந்தியை கற்க வேண்டும். இந்த தேசத்தில் ஒரே மொழிக் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்று நினைப்பதே எதிர்க்கிறோம். இந்தியாவில் சனாதன சட்டம் நடைமுறையில் இருப்பது உண்மை என்பதை நிரூபித்துக் காட்டக்கூடிய இடம் தான் நீதிமன்றம். எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் பள்ளி நடத்த அனுமதி கேட்டுள்ளனர். அந்த பள்ளியில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை, அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது. அந்த இடம் எங்களுடைய இடம் என்பதால் என் பெயரை பயன்படுத்தியுள்ளனர்"

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement