For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது" - ஈபிஎஸ் பேச்சு!

09:47 PM Apr 11, 2024 IST | Web Editor
 திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது    ஈபிஎஸ் பேச்சு
Advertisement

திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்கள் ஆதரித்து தீவிர பரப்புரை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர் பரப்புரை செய்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை நெல்லை, கோவையில் பரப்புரை செய்கிறார்.

இந்நிலையில், ஆரணி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை சேவூர் புறவழிச்சாலையில் பரப்புரையில் ஈடுபட்டார்.

இதையும் படியுங்கள் : “மலேசியாவில் இளைஞரை தனி அறையில் வைத்து சித்ரவதை செய்யும் ஹோட்டல் உரிமையாளர்!” – மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் மனு!

அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :

"எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆசீர்வாதம் உள்ளவரை அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. அனைத்து தடைகளையும் உடைத்து மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். நான் ஒரு விவசாயி. விவசாயிகள் மட்டுமே யாருக்கும் பயப்பட மாட்டார்கள். என்னை விமர்சிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்? அதிமுக ஆட்சியில் மட்டுமே விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் தரப்பட்டது. உணவு உற்பத்தி அதிகரிப்பிற்கு தேசிய அளவில் அதிமுக அரசுக்கு விருது கிடைத்தது. இந்தியாவிலேயே 140 விருதுகளை பெற்ற அரசு அதிமுக அரசுதான்.

தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல. குழு அரசாங்கம். ஒவ்வொரு திட்டத்திற்கும் குழு போடும் அரசாகவே திமுக அரசு உள்ளது. திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது அமைச்சர் உதயநிதியின் முதலமைச்சர் கனவு பலிக்காது. திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது மிகப்பெரிய கேள்விக்குறி. இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. இன்னும் பிரதமர் வேட்பாளர் யார் என்றே இந்தியா கூட்டணி அறிவிக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் மட்டும் எப்படி இந்தியா கூட்டணி கட்சியினர் ஒற்றுமையாக அரசை நடத்துவார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை"

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்தார்.

Tags :
Advertisement