"குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக" - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் நாள் பிரச்சார பயணத்தின் இறுதியாக நேற்று மாலை கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது, "ஒரு ஆட்சி அமைவதற்கு இங்கே இருக்கின்ற மக்களே சாட்சி, அவினாசி திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள், முழுக்க முழுக்க மாநில நிதியில் இருந்து நிதி ஒதுக்கிடப்பட்ட இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அத்திக்கடவு - அவினாசி திட்டம் இரண்டையும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம். பணி ஆரம்பிக்கின்ற சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியில் கைவிட்டு விட்டார்கள், மீண்டும் அதிமுக ஆட்சி 2026ல் அமையும். அத்திக்கடவு - அவினாசி திட்டம் இரண்டு கொடுக்கப்படும்.
எங்க அருந்ததிய மக்கள் அதிக அளவில் வாழும் பகுதி ஏழை மக்கள் அதிகம் பேர் வீடு இல்லாமல் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு ஏழை அருந்ததிய மக்களுக்கு தனியே இடம் வாங்கி வீடு கட்டி தரப்படும். ஏற்கனவே பசுமை வீடு கட்டிக் கொடுத்தோம் திமுக ஆட்சி கைவிட்டு விட்டார்கள்.
அதிமுக ஆட்சியில் நுழைவாசை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தோம். ஏழை மக்கள் பாதிக்காத அளவில் பார்த்துக் கொண்டோம். திமுக ஆட்சிக்கு வந்த பின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. மாநகராட்சி பகுதியில் வீட்டு வரி நூறு சதவீதம், கடை வரி 150 சதவீதம் உயர்த்தி விட்டார்கள். அதிமுக ஆட்சியில் 1500 ரூபாய் இருந்தால் போதும், தற்பொழுது 2500 ரூபாய் கடைக்கு வரி செலுத்த வேண்டும் மின் கட்டணம் 52% உயர்ந்துவிட்டது. வீட்டுக்கு 2000 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்த குடும்பம் இன்று ஐந்தாயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. அது மட்டும் இன்றி டெபாசிட் கேட்கிறார்கள்.
அனைத்தையும் உயர்த்தி விட்டார்கள், வரி போடாதது எதுவுமே இல்லை, குடிநீர் வரி போட்டு உள்ளார்கள். குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான். அதிமுக ஆட்சியில் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு வேலை இல்லை ,11 மாதங்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விலையில்லாமல் கொடுத்த அரசாங்கத்திற்கு வருமானம் இல்லை தொழிற்சாலைகள் இயங்கவில்லை, வரி இல்லை, ஜி.எஸ்.டி இல்லை, வரி கிடையாது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அம்மா உணவகத்தில் மூன்று வேளை ஏழை மக்களுக்கு உணவு அளித்த அரசாங்கம் அம்மா அரசாங்கம் தான்.
வேறு எந்த அரசாங்கமும் இதுபோன்று மக்களை காப்பாற்றியது கிடையாது. ஏழை மக்களுக்கு ஒரு பாதிப்பு வரும் மக்களை காப்பாற்றிய ஒரே அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் தான். இந்த ஆட்சியில் குடும்ப ஆட்சியாக தான் இருக்கிறது. கருணாநிதி முதலமைச்சர், ஸ்டாலின் முதலமைச்சர், இப்படி குடும்பத்தில் இருக்கிறவர்கள் ஆட்சி அதிகாரத்திற்காக மக்களுக்கு வேறு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஒரு பெரிய திட்டமாவது இந்த ஆட்சியில் கொண்டு வந்தார்களா?
எத்தனை? கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது. இன்று ஒன்றுமே கிடையாது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% கொண்டு வந்தோம். நல்ல கல்வி, குடிநீர், மருத்துவம், விலைவாசி குறைவாக இருக்க வேண்டும், தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும் என எல்லாத்தையும் கொடுத்த அரசாங்கம்
அதிமுக அரசாங்கம். விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் கொடுத்தோம், தொடக்க வேளாண்மை வகையில் இரண்டு முறை வேளாண் கடனை தள்ளுபடி செய்தோம்.
இப்படி எல்லாம் செய்து மக்களை பாதுகாத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். ஸ்டாலின் முதலமைச்சராக வந்த பிறகு நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்தார் என்பதை சிந்திக்க வேண்டும். எதுவுமே செய்யவில்லை எல்லா துறையும் ஊழல் மலிந்த துறை. எந்த துறையும் ஊழல் இல்லாத துறை இல்லை, எந்த அலுவலகம் சென்றாலும் சில்லறை இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.
2026 இல் அதிமுக அரசங்கம் அமையும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல் அதை நீங்கள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். முடியாத கொடுமைக்கு முடிவு கட்டுவோம், விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும் அம்மாவின் நல்ல ஆட்சியை 2026 இல் அமைப்போம். கூட்டணி கட்சிக்கு தொகுதி கொடுத்தாலும் அந்த சின்னத்திற்கு வாக்களித்து. வெற்றி பெற செய்ய வேண்டும் கூட்டணிக்கு இந்த தொகுதியை விட்டுக் கொடுத்தாலும், அந்த சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.