Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"திமுகவிற்கு போட்டியே கிடையாது" - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

திமுகவிற்கு போட்டியே கிடையாது, யார் எதிரில் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
09:25 AM Aug 23, 2025 IST | Web Editor
திமுகவிற்கு போட்டியே கிடையாது, யார் எதிரில் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
Advertisement

நெல்லையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "விவசாயத்தில் வேரோடு பிடுங்கி நட்டால் தான் பயிர் நன்றாக விளையும். 15 வருடங்களாக பாஜக வேரோடு பிடுங்கும் வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது, வருங்காலத்திலும் திமுக தான் வெற்றி பெறும்.

Advertisement

நயினார் நாகேந்திரன் தலைவராக மேடையில் உள்ளார். மிகப்பெரிய கூட்டத்தை கூட்டியுள்ளார். அவர்களது ஆசையை அவர்கள் சொல்லி வருகிறார்கள் வேரோடு பிடுங்கி நடவு செய்தால் பெரியதாக தான் வளரும். எங்கள் ஆட்சி மீது பாஜக வைப்பது குற்றச்சாட்டு அல்ல அவர்களது ஆசை. நாங்கள் தான் தேர்தலில் வெற்றி பெறுவோம், அமித்ஷா பேசிய இதே ஊரில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் அவர்கள் நினைப்பது நடக்காது.

அதிமுக, பாஜக இருவரும் கூட்டணி அதிமுக ஆட்சியில் இருந்தபோது இருண்ட ஆட்சி அவர்களது கண்ணுக்கு தெரியவில்லை. தமிழகத்திற்கு இதுவரை அமித்ஷா மூன்று முறை வந்து விட்டார். தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறார். எடப்பாடி எப்போதும் தனித்து ஆட்சி என்கிறார். இதற்கு அமித்ஷாவும் விளக்கம் சொல்லவில்லை, எடப்பாடியும் விளக்கம் சொல்லவில்லை.

அதிமுகவின் கூட்டணியை கீழே உள்ளவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அதிமுக, பாஜக தொண்டர்கள் இந்த கூட்டணியை ஏற்றுக் கொள்ளவில்லை. இதை வைத்துவிட்டு அவர்கள் நாங்கள் ஜெயிக்கப் போகிறோம் என சொல்கிறார்கள். முதல்வரை யார் எந்த பெயரை வைத்து அழைத்தாலும் மீண்டும் அவர் தான் தமிழகத்தின் முதலமைச்சர்.

பொதுமக்கள், மகளிர் போன்றோர் மிகப்பெரிய ஆதரவை முதல்வருக்கு தந்து வருகின்றனர். எம்ஜிஆருக்கு இருந்த மகளிர் ஆதரவை தாண்டி இப்போது முதலமைச்சருக்கு அவர்களது ஆதரவு பெருகி வருகிறது. நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமையும். மீண்டும் தமிழக முதல்வராக திமுக தலைவர் வருவார். தோற்றுப் போய்விடுவோம் என எண்ணி தான் பீகார், ஆந்திரா போன்ற இடங்களில் பிரச்சனைகளை செய்து வருகின்றனர். திமுகவிற்கு போட்டியே கிடையாது யார் எதிரில் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKAmitshaBJPCompetitionDMKk.n.nehruMinisterNellai
Advertisement
Next Article