For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"2026ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்" - நயினார் நாகேந்திரன்!

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற 200 கோடி ரூபாய் மோசடியை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
12:29 PM Jul 12, 2025 IST | Web Editor
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற 200 கோடி ரூபாய் மோசடியை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 2026ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்    நயினார் நாகேந்திரன்
Advertisement

மதுரை மாநகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் வரிக்குறைப்பு எனக் கூறி 200 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே இந்த மோசடி தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் முகவர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற 200 கோடி ரூபாய் வரி முறைகேடு விவகாரத்தை கண்டித்து மதுரை மாவட்ட பாஜக சார்பில் மதுரை புதூர் பேருந்து நிலையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டன உரை ஆற்றினார். அப்போது பேசியவர், "தமிழ்நாட்டில் ஒரு தவறு நடைபெறுகிறது என்றால் அதை சுட்டிக்காட்டுகின்ற கட்சியாக அதை தடுத்து நிறுத்தக்கூடிய கட்சியாக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற அதிமுகவும், பாஜகவும் தான் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது.

காரணம் திமுக தலைவர் ஓரணியில் தமிழ்நாடு என்று வீடு வீடாக செல்கின்றனர். தோல்வி பயம் காரணமாக ரோட் ஷோ நடத்துகின்றனர். அமித்ஷாவை பார்த்தாலே திமுகவினர் பயப்படுகின்றனர். தமிழகத்துக்கு வருவதற்கு டெல்லியில் இருந்து விமானம் ஏறுகின்றார் என்று செய்தி கேட்டால் திமுகவினர் பயப்படுகின்றனர்.

தமிழக முதல்வருக்கு வேறு பணி இல்லை, போர் அணியில் காவல் நிலையத்தில் லாக்கப் டெத், ஓர் அணியில் கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள், விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தான் 10 லட்சம் ரூபாய். வேங்கை வயல் பிரச்சனை குறித்து திருமாவளவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில் இடது கம்யூனிஸ்ட் அவ்வப்போது குரல் எழுப்புகின்றனர். கூட்டணியில் இருந்து கொண்டு தவறு நடக்கும்போது தட்டி கேட்கிறார் என்றால் அது ஒரு நல்ல விஷயமாக தடுக்கும் அவருக்கு எனது பாராட்டுக்கள்.

காங்கிரஸ் என்கின்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கின்றதா, இல்லையா என்று யாருக்குமே தெரியவில்லை காவல் நிலையம் மட்டுமல்ல, கள்ளச்சாராயமாக இருந்தாலும் கூட எந்த பிரச்னையையும் அவர்கள் கையில் எடுக்கவில்லை, 2026ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்.

மதுரை எப்போதுமே பாஜகவினருக்கு ராசியான நகரம், மதுரையில் தான் அமித்ஷா தலைமையில் மாநாடு நடைபெற்றது. அதேபோன்று முருக பக்தர்கள் மாநாடும் நடைபெற்றது. முருக பக்தர்கள் மாநாட்டில் பல லட்சம் பக்தர்களும் பொதுமக்களும் பங்கு பெற்றனர். ஆனால் முருக பக்தர் மாநாட்டிற்கு வந்த பல லட்சம் மக்கள் எங்கிருந்து வந்தார்கள் எவ்வாறு சென்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் சிறப்பான முறையில் வந்து சென்றார்கள்.

மதுரை மாநகராட்சியில் நடைபெற கூடிய ஊழலை தட்டிக் கேட்கும் வகையில் தான் இன்று பாஜக சார்பில் இந்த மதுரை மண்ணில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை திமுகவிற்கு ராசி இல்லாத ஒரு இடம், இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு பின் அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை.

மீனாட்சி அம்மையின் ஆட்சி தமிழகத்தில் நிச்சயம் மலரும். வீடுகளுக்கு உரிய வரி விதிப்பில் மாபெரும் ஊழல் செய்திருக்கிறார்கள். மதுரை மட்டுமல்ல சிவகங்கை மாவட்டத்திலும் திமுகவினர் இன்று ராஜினாமா செய்திருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. திமுகவை சேர்ந்த தொழிலதிபரிடம் ஏழு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

மதுரை துணை மேயர் நாகராஜன் பொதுமக்கள் நடமாடும் பாதையவே ஆக்கிரமிப்பு செய்து வீடு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இவ்வாறாக எதிலும் எல்லாவற்றிலும் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவற்றைப் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
ஓரணியில் தமிழகம் என்கின்ற நிலையை மாற்றி கண்ணகி போராடிய இந்த மதுரை மண்ணிலிருந்து கூறுகிறேன் நிச்சயம் திமுகவை வீட்டிற்கு அனுப்புவோம் என்று கூறினார்.

Tags :
Advertisement