ராகுல் காந்தியை அடிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா? உண்மை என்ன?
This news fact checked by Boom
காங். தலைவர் ராகுல் காந்தி சாவர்க்கரை பற்றி பேசியதற்காக, அவரை உத்தவ் தாக்கரே அடிக்க வேண்டும் என்று கூறிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தியை நாலயக் (பயனற்றவர்) என்று அழைத்து, அவரை அடிக்க வேண்டும் என்று கூறிய பழைய வீடியோ ஒன்று, சமீபத்திய வைரலானது.
இந்த வீடியோ குறித்த உண்மை சரிபார்ப்பில், இந்த வீடியோ பழையது என கண்டறியப்பட்டது. இந்தியா கூட்டணி உருவானதைத் தொடர்ந்து தாக்கரேவும் காந்தியும் கூட்டாளிகளாக மாறினர். உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT) மற்றும் ராகுல் காந்தியின் காங்கிரஸ் ஆகியவை இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட்டணியாக 24 எதிர்க்கட்சிகளுடன் இணைந்து இந்தியா கூட்டணியின் கீழ் போட்டியிட்டன.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 இடங்களில் சிவசேனாவும், காங்கிரஸ் கட்சியும் 22 இடங்களில் வெற்றி பெற்றன. வைரலான அந்த வீடியோவில், தாக்கரே மராத்தியில், “ராகுல் காந்தியை பயனற்றவர் என்று கூறியது நான்தான். அவரை அடிக்க வேண்டும்" என்று கூறுவதாக தெரிகிறது. "ராகுல் காந்தி போன்ற பயனற்ற நபரை சாலையில் செருப்பால் அடிக்க வேண்டும் என்று நான் வெளிப்படையாக கூறியுள்ளேன் - உத்தவ் தாக்கரே" என்ற தலைப்பில் அந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.
இதே பதிவை, ட்விட்டர் (எக்ஸ்) இல் மற்றொரு பயனர், "ராகுல் காந்தியை செருப்பால் அடிக்க வேண்டும் என்று நான் சொன்னேன்: உத்தவ் தாக்கரே.. கதவுகளுக்குப் பின்னால் ராகுலை அவர் என்ன செய்திருப்பார் என்று நினைத்து நான் நடுங்குகிறேன். அவர் செய்ய வேண்டியதை அவர் உண்மையில் செய்தார்" என பகிர்ந்திருந்தார்.
உண்மைச் சரிபார்ப்பு:
கூகுளில் வைரலான வீடியோவில் இருந்து சில முக்கிய பிரேம்களின் தலைகீழ் படத் தேடல் தொடங்கப்பட்டது. அதேபோல், யூடியூபில் இந்தியா டிவி பகிர்ந்த அறிக்கை கண்டறியப்பட்டது. அப்போது, இந்த வீடியோ டிசம்பர் 15, 2019 அன்று பகிரப்பட்டது என தெரியவந்தது. சாவர்க்கரை ஓடிப்போனவர் என்று அழைத்ததால், ராகுல் காந்தியை காலணியால் அடிக்க வேண்டும் என்று உத்தவ் கூறியிருந்தார்.
இந்த அறிக்கையின் தொடக்கத்தில், மூன்று மாதங்களுக்கு முன்பு, செப்டம்பர் 2019 இல் தாக்கரே இந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறப்பட்டிருந்தது. இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்து, இந்த சம்பவம் குறித்த கூடுதல் செய்தி அறிக்கைகள் தேடப்பட்டது. அப்போது, செப்டம்பர் 18, 2019 அன்று ரிபப்ளிக் வேர்ல்டு பகிர்ந்த செய்தி கண்டறியப்பட்டது. இந்த அறிக்கையும், தாக்கரேஃவின் உரையின் பதிப்பைக் கொண்டிருந்தது. அதேபோல், விக்ரம் சம்பத்தின் புத்தகமான 'சாவர்க்கர்: எக்கோஸ் ஃப்ரம் எ ஃபார்காட்டன் பாஸ்ட்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் உத்தவ் தாக்கரே ஆற்றிய முழு உரையை கிடைத்தது. இந்த வீடியோவின் 11:20 நிமிடங்களில், சாவர்க்கரை அவமதித்ததற்காக காங்கிரஸ் தலைவர்கள் மணிசங்கர் ஐயர் மற்றும் ராகுல் காந்தியை தாக்கரே விமர்சிக்கத் தொடங்குகிறார். அப்போதுதான், சாவர்க்கரை ஓடிப்போனவர் என்று ராகுல் காந்தி கூறியதாக எதிர்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
ஜூலை 2023-ல் இந்தியா கூட்டணி உருவாக்கப்படுவதற்கு முன்பு, 2019 இல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த வைரலான வீடியோ ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் பழமையானது என உறுதி செய்யப்பட்டது.
முடிவு:
சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தியை நாலயக் (பயனற்றவர்) என்று அழைத்து, அவரை அடிக்க வேண்டும் என்று கூறியதாக வைரலாகிவரும் வீடியோ பழையது என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
Note : This story was originally published by Boom and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.