Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அயோத்தி கோயிலை இடித்துவிட்டு, அதற்கு பதிலாக மசூதி கட்டுவதாக ராகுல் காந்தி தெரிவித்தாரா? உண்மை என்ன?

11:49 AM Nov 17, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘PTI News‘ 

Advertisement

வயநாடு தொகுதியில் தேர்தல் பரப்புரையின்போது, அயோத்தி கோயிலை இடித்துவிட்டு, அதற்கு பதிலாக மசூதி கட்டுவதாக ராகுல் காந்தி தெரிவித்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்த பிறகு, அத்தொகுதி காலியாகிவிட்டதால், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 13, 2024 அன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா அக்கட்சி சார்பில் போட்டியிட்டார். 

இடைத்தேர்தலுக்கு முன்னதாக, ராகுல் காந்தியின் பெயரில் வாக்கு கேட்டும்படியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அயோத்தி கோயிலை இடித்துவிட்டு, அதற்கு பதிலாக மசூதி கட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ் இந்த வீடியோவைப் பயன்படுத்தியதாக பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை சரிபார்ப்பு:

நவம்பர் 13 அன்று 'பேஸ்புக்' இல் ஒரு வீடியோவை பகிர்ந்த ​பவன் சௌத்ரி ஜாகிவாடா என்ற பயனர், "காங்கிரஸ் தனது வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்திக்கு வாக்களிக்க இந்த வகையான விளம்பரம் செய்ததற்கு வெட்கப்படுகிறேன். காங்கிரஸின் மனநிலை” என பகிர்ந்துள்ளார்.

வயநாடு காங்கிரஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், அயோத்தி கோயிலை இடித்துவிட்டு, அதற்கு பதிலாக மசூதி கட்டுவதாக காட்டப்பட்டுள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ் இந்த வீடியோவைப் பயன்படுத்தியதாக பயனர்கள் கூறுகின்றனர். (இடுகையின் இணைப்பு , காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காணலாம்)

இந்த கூற்றை உறுதிப்படுத்த முதலில் காங்கிரஸின் அனைத்து பெரிய தலைவர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களில் தேடப்பட்டது. ஆனால் வைரல் வீடியோவைப் போன்ற எந்த வீடியோவும் கண்டுபிடிக்க முடியவில்லை. விசாரணையைத் தொடர்ந்து, வைரலான வீடியோவின் முக்கிய பிரேம்களின் தலைகீழ் தேடல் செய்யப்பட்டது. அப்போது, 26 ஏப்ரல் 2024 அன்று கேரள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லாவண்யா பல்லால் ஜெயின் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

லாவண்யா பல்லால் ஜெயின் தனது பதிவில், "ராகுல் காந்தியின் போலி வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியதற்காக பாஜக மீது நாங்கள் (காங்கிரஸ் கட்சி) புகார் அளித்துள்ளோம். போலியான கதையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பாஜக அவநம்பிக்கையில் உள்ளது. இப்போது இன்னும் அதிகமாக உள்ளது. போலியான வீடியோக்களை நாடுகிறார்கள்'' என்று  தனது பதிவில், போலியான வீடியோக்களை பரப்பிய சில கணக்குகளை பகிர்ந்துள்ளார்.

விசாரணையின் முடிவில், இடைத்தேர்தலின் போது வயநாடு மக்களவைத் தொகுதியின் கல்பெட்டா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரப் பொறுப்பாளராக இருந்த காங்கிரஸ் எம்பி ராஜ்மோகன் உன்னிதானைத் தொடர்பு கொண்டோம். ராஜ்மோகன் உன்னிதன், "இதில் காங்கிரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. நாங்கள் அப்படி எந்த வீடியோவையும் எடுக்கவில்லை. இது வலதுசாரிப் பிரச்சாரமாக இருக்கலாம்" என தெரிவித்தார்.

எனவே, இதன்மூலம் மக்களவை தேர்தலின் போது, ​​அயோத்தி கோயிலை இடித்து, அதற்கு பதிலாக மசூதி கட்டுவதாக வைரலான வீடியோ போலியானது என உறுதிசெய்யப்பட்டது.

இதுகுறித்து, ஏப்ரல் 2024 இல் வயநாடு காங்கிரஸ் கமிட்டியால் போலீசில் புகார் செய்யப்பட்டது. வயநாடு காங்கிரஸ் கமிட்டி இந்த வீடியோவை போலியானது என்றும், அதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதைப் பகிர்ந்ததன் மூலம் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வைரலான வீடியோவில், காங்கிரஸ் கட்சிக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்றும், இந்த வீடியோ முற்றிலும் ஆதாரமற்றது என்றும் உறுதியானது.

முடிவு

மக்களவை தேர்தலின் போது, ​​அயோத்தி கோயிலை இடித்து, அதற்கு பதிலாக மசூதி கட்டுவதாக வெளியான வீடியோ போலியானது என கண்டறியப்பட்டது. இந்த வீடியோ குறித்து ஏப்ரல் 2024 இல் வயநாடு காங்கிரஸ் கமிட்டியால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வைரலான வீடியோவில், காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், இந்த வீடியோ முற்றிலும் ஆதாரமற்றது என்றும் தெளிவாகிறது.

Note : This story was originally published by PTI News and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
ayothiBJPCongressINCKeralaNews7Tamilpriyanka gandhiRahul gandhiWayanad
Advertisement
Next Article