For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீஸ் சம்மன்!

08:17 PM Apr 29, 2024 IST | Web Editor
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீஸ் சம்மன்
Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்த போலி வீடியோ குறித்த வழக்கின் விசாரணைக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் ஆஜராக டெல்லி சைபர் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. 

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதைதொடர்ந்து ஏப்.26ம் தேதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வது போன்று அமித்ஷா பேசும் விடியோவை ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சிலர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தனர். தெலங்கானா காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் அந்த வீடியோ பதிவிட்டிருந்தனர்.

இதையும் படியுங்கள் : ’குரங்கு பெடல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

இந்த வீடியோ போலியானது என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், டெல்லி சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் உள்துறை அமைக்கம் நேற்று புகார் அளித்தது.

இந்நிலையில், சைபர் குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை மே 1 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், விசாரணைக்கு வரும் போது அவரின் செல்போனை எடுத்து வரவும் சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement