Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால் - ஏப்.15 வரை நீதிமன்றக் காவல்!

01:23 PM Apr 01, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த மார்ச் 21-ம் தேதி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள் : போக்குவரத்து நெரிசலின் போது UPSC தேர்வுக்கு படித்த சொமேட்டோ ஊழியர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அமலாக்கத்துறையின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில்,  டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

கெஜரிவாலை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்த நிலையில்,  ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவல் விதித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதையடுத்து,  மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
#INDIAAllianceAAPArrestArwind KejriwalBJPDelhiDelhi high courtDELHI LIOUOR POLICY CASEndaRouse Avenue District Court Complex
Advertisement
Next Article