Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி !

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 3ஆயிரத்து 182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
01:40 PM Feb 08, 2025 IST | Web Editor
Advertisement

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரிவிந்த கெஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் அதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Advertisement

இதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.

பர்வேஷ் வர்மா 28ஆயிரத்து 238 வாக்குகள் பெற்ற நிலையில் 3ஆயிரத்து 789 வாக்குகள் பின்தங்கி 24 ஆயிரத்து 449 வாக்குகளுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவைச் சந்தித்தார். அதேபோல் ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் தோல்வியை தழுவினார்.

பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் 34 ஆயிரத்து 632 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தநிலையில் 572 வாக்குகள் வித்தியாசத்தில் மணீஷ் சிசோடியா பின் தங்கினார். ஆம் ஆத்மியின் முக்கிய முகங்களான கெஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியாவின் தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகி திகார் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Arvind Kejriwalassembly electionsBJPCMDefeatedDelhiManish
Advertisement
Next Article