For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர் விடுமுறை எதிரொலி | #OmniBus கட்டணம் பல மடங்கு உயர்வு..!!

12:38 PM Sep 13, 2024 IST | Web Editor
தொடர் விடுமுறை எதிரொலி    omnibus கட்டணம் பல மடங்கு உயர்வு
Advertisement

தொடர் விடுமுறை எதிரொலியாக, ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

நாளை 14-ம் தேதி (சனிக்கிழமை), வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்தம்), வரும் 17-ம் தேதி (மிலாடி நபி) என்பதால் தொடர் விடுமுறை வருவதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதன் காரணமாக சென்னையில் வசிக்கக்கூடிய பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சனி, ஞாயிறு விடுமுறை என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு அதிகப்படியாக செல்வர்.

இதன் காரணமாக, அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்துகளில் சொகுசாக செல்வதற்கு திட்டமிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்வர். இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக ஆம்னி பேருந்துகள் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

அதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. சுமார் ரூ.4500 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் கடுமையான துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Tags :
Advertisement