Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

5 மாநில தேர்தல் தோல்வி குறித்து டெல்லியில் காங்கிரஸ் ஆய்வுக் கூட்டம்!

03:37 PM Dec 09, 2023 IST | Web Editor
Advertisement

ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

Advertisement

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மற்றும் மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், தெலங்கானாவில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் டிசம்பர் 9 ஆம் தேதி (சனிக்கிழமை) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : ”உங்களில் ஒருவராக மாற்றியதற்கு நன்றி” – நடிகை மாளவிகா மோகனன் நெகிழ்ச்சிப் பதிவு!

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், தற்காலிக முதல்வருமான அசோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின்
செயல்பாடுகள் குறித்தும் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டிசம்பர் 8 ஆம் தேதி  சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
5 state electionsashok gehlotCongressDelhiFailureMallikarjun KhargemeetingRahul gandhi
Advertisement
Next Article