For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாட்டை வடக்கு, தெற்கு என பிரிக்கப்பார்க்கிறது காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

04:25 PM Feb 07, 2024 IST | Web Editor
நாட்டை வடக்கு  தெற்கு என பிரிக்கப்பார்க்கிறது காங்கிரஸ்   பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Advertisement

காங்கிரஸ் ஆட்சியில்  12-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், பாஜகவின் ஆட்சியில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும், நாட்டை வடக்கு, தெற்கு என காங்கிரஸ் பிரிக்கப்பார்ப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப். 1-ம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதனிடையே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது எமர்ஜென்சி உட்பட எண்ணற்ற ஒடுக்குமுறைகள் நடந்தன. நக்சலைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தான் காரணம்.  நாட்டை வடக்கு, தெற்கு என காங்கிரஸ் பிரிக்கப் பார்க்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 12-வது இடத்தில் இருந்தது. பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்திற்கு வந்துள்ளது.

பாஜக ஆட்சியில் ஆங்கிலேயர் கால சட்டங்களை நீக்குகிறோம் அல்லது மாற்றுகிறோம். ஆனால், ஆங்கிலேயர் கால சட்டங்களை காங்கிரஸ் அரசு இருந்த போது ஏன் நீக்கவில்லை. ஆங்கிலேயர் கால மரபுகளை காங்கிரஸ் ஏன் பின்பற்றியது. 370வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு தான், ஜம்மு காஷ்மீரில் பட்டியலினத்தவர் உரிமைகளைப் பெற்றனர். ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைக் கூட பாஜக அரசுதான் நிறைவேற்றியது. முன்னாள் பிரதமர் நேரு தனது ஆட்சிக்காலத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டாம் என்று கடிதம் எழுதினார்”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement