For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - மண்டி தொகுதியில் கங்கனாவை எதிர்த்து விக்ரமாதித்ய சிங் போட்டி!

10:08 PM Apr 13, 2024 IST | Web Editor
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு   மண்டி தொகுதியில் கங்கனாவை எதிர்த்து விக்ரமாதித்ய சிங் போட்டி
Advertisement

இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியின் பாஜக வேட்பாளரும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத்துக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக விக்ரமாதித்ய சிங் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் விக்ரமாதித்ய சிங்கை அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது. அவர் பாஜக வேட்பாளரும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத்துக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ளார். சண்டிகரில் தற்போதைய எம்பி கிரோன் கெருக்கு பதிலாக பாஜகவின் சஞ்சய் டாண்டனை எதிர்த்து மணீஸ் திவாரி போட்டியிடுகிறார்.

மகேசனா தொகுதியில் ராம்ஜி தாகூர், அகமதாபாத் கிழக்கு தொகுதியில் ஹிம்மத்சிங் படேல், ராஜ்கோட் தொகுதியில் பரேஷ்பாய் தனானி, நவசாரி தொகுதியில் நைஷாத் தேசாய், சிம்லாவில் வினோத் சுல்தான்புரி, கியோஞ்சரில் மோகன் ஹெம்ப்ராம், பத்ரக் தொகுதியில் அனந்த் பிரசாத் சேத்தி, பாலாசோர் தொகுதியில் ஸ்ரீகாந்த் குமார் ஜெனா, ஜாஜ்பூரில் அஞ்சல் தாஸ், தேன்கனலில் சஷ்மிதா பெஹெரா, கேந்த்ராபரா தொகுதியில் சித்தார்த் ஸ்வரூப் தாஸ், ஜகத்சிங்பூரில் ரவீந்திர குமார் சேத்தி, பூரியில் சுசரிதா மொஹந்தி மற்றும் புவனேஸ்வரில் யாசிர் நவாஸ் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியலைத் தவிர, குஜராத் சட்டப் பேரவைக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி, விஜாப்பூர் தொகுதியில் தினேஷ்பாய் துளசிதாஸ் படேல், போர்பந்தர் தொகுதியில் ராஜூபாய் பீமன்பாய் ஒடெட்ரா, மானவதார் தொகுதில் ஹரிபாய் கோவிந்த்பாய் கன்சாகரா, காம்பாட் தொகுதியில் மகேந்திரசிங் ஹரிசிங் பர்மர் மற்றும் வகோடியா தொகுதியில் கனுபாய் பூஜாபாய் கோஹில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement