கோவை | 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தினார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும் மற்றும் அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தன்னை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் திமுக ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன் என்றும் நேற்று சபதம் எடுத்தார்.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று காலை கோவையில் உள்ள அவரது வீட்டில் 8 முறை தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டு அண்ணாமலை போராட்டம் நடத்தினார்.