”2026ல் தேமுதிக உள்ள கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைக் பிடிக்கும்”- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு...!
தேமுதிக சார்பில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ”உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது,
“இந்தத் தருணம் நமக்கு மிக மிக முக்கியமான தருணம். வருகின்ற தேர்தலிலே தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் உள்ள கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைக் பிடிக்கும். நேற்று முளைத்த காலான்களால் இங்கு ஒன்றும் எடுபடாது. ஒரு நாள் மழைக்கே அவை தாங்காது.
தேமுதிக என்பது ஆல விருட்சம். 20 ஆண்டு கால ஆலமரம், பல விழுதுகளைக் கொண்ட ஆல விருட்சம் இது. உங்கள் எல்லாரையும் பார்ப்பதற்கு சின்ன கேப்டன் விஜய பிரபாகர் தொகுதி தொகுதியாக உறுதியாக வருவார். 2011 தலைவர் அவர்கள் எதிர்கட்சித் தலைவரானார். இந்த 2026-லே நீங்க வேடிக்கை பாருங்க.
இதுவரைக்கும் தமிழ்நாட்டில கூட்டணி அமைச்சரவையை நாம் பார்த்தது இல்லை. கூட்டணி அமைச்சரவை என்றால் ஆட்சியில் அனைவருக்கும் பங்கு. அனைவருக்கும் அமைச்சராகின்ற உரிமை நிச்சயம். இந்த தேர்தலில் அந்நிலை உருவாகும். காரைக்குடி கல்விக்குடியாக இருந்த நிலையில் இதுவரை ஆண்ட கட்சிகள், இன்று மக்களின் எதிர்பார்ப்பை மீறி பல தனியார் மதுக்கடைகள் திறக்கப்பட்டு, மக்களை நிரந்தர குடிகாரர்களாக மாற்றியுள்ளன” என்றார்.