For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு!

04:30 PM Nov 12, 2023 IST | Student Reporter
சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு
Advertisement

சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் இதுவரை 118 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர்  தெரிவித்தனர்.

Advertisement

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு 2 மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.   இதில் எந்த இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.   இந்த உத்தரவின்படி,  காலை 6 மணி முதல் 7 மணி வரையும்,  இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

   

இதையும் படியுங்கள்:  வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

இதன்படி விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188வது சட்டப் பிரிவின்படி 6 மாதம் சிறைத் தண்டனையும்,  ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நேர கட்டுப்பாட்டை மீறியும், தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285-ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும், மருத்துவமனை, வழிப்பாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், குடிசைப் பகுதிகள் போன்ற பட்டாசு தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவர்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவதற்கு போலீசார் முடிவு செய்தனர்.  இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படை  அமைக்கப்பட்டது.  இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக சென்னையில் மட்டும் இதுவரை 118 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags :
Advertisement