For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

9 வயதில் 10 மாதத்திற்கு வாத்து மேய்க்க குத்தகை... இறந்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட சிறுவன் - நடந்தது என்ன?

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனை வாத்து மேய்க்க 10 மாதம் குத்தகைக்கு விட்ட நிலையில், மஞ்சள் காமாலை நோயால் இறந்த சிறுவனின் சடலத்தை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்த வாத்து ஒப்பந்ததாரர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு...
07:43 AM May 22, 2025 IST | Web Editor
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனை வாத்து மேய்க்க 10 மாதம் குத்தகைக்கு விட்ட நிலையில், மஞ்சள் காமாலை நோயால் இறந்த சிறுவனின் சடலத்தை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்த வாத்து ஒப்பந்ததாரர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு...
9 வயதில் 10 மாதத்திற்கு வாத்து மேய்க்க குத்தகை    இறந்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட சிறுவன்   நடந்தது என்ன
Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் பகுதியில் திருப்பதி மாநிலத்தைச் சேர்ந்த வாத்து மேய்க்கும் நபர், அதே திருப்பதி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனை வாத்து மேய்க்க திருப்பதியில் வசிக்கும் அவர்களின் பெற்றோர்களின் அனுமதியுடன் குத்தகைக்கு எடுத்துள்ளார். அவர்களுடைய ஒப்பந்தப்படி வாத்து மேய்க்க அனுப்பிய சிறுவனை 10 மாத காலத்திற்குள் சந்திக்கக் கூடாது, பேசக்கூடாது என்ற ஒப்பந்தம் போடப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் வாத்து மேய்த்துக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவன் வெங்கடேஷனுக்கு தீவிரமான மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இதனையடுத்து வெம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒப்பந்ததாரர் வெங்கடேஷை அனுமதித்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்துவிட்டார். பின்னர் சிறுவனின் சடலத்தை அவர்களுடைய பெற்றோருக்கு தெரிவிக்காமல் வெண்பாக்கத்தில் புதைக்க முயற்சித்தனர்.

தகவல் அறிந்த அப்பகுதியினர் சிறுவனின் சடலத்தை புதைக்க அனுமதிக்காததால், ஒப்பந்ததாரர் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் உள்ள பாலாற்ங்கரையோரம் உள்ள சுடுகாட்டில் சிறுவனின் சடலத்தை கடந்த மாதம் புதைத்துவிட்டார். இது தொடர்பாக யாருக்கும் தகவல் அளிக்கவில்லை.

இந்நிலையில் சிறுவனைக்காண பெற்றோர்கள் விருப்பப்பட்டு ஒப்பந்ததாரரிடம் கேட்ட பொழுது மழுப்பலான பதிலை கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் திருப்பதி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சிறுவனை காணவில்லை, மீட்டு தர வேண்டும் என புகார் அளித்தனர். அதன் பெயரில் ஆந்திர மாநில காவல்துறையினர் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் உள்ள வாத்து மேய்க்கும் ஒப்பந்ததாரரிடம் விசாரணை செய்ததில், அவர் சிறுவனுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு இறந்து விட்டதால் காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள், வாத்து மேய்க்கும் ஒப்பந்ததாரர்
ஆந்திர மாநில காவல் துறை மூலம் காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையின் உதவியை நாடினர். பின்னர் புதைக்கப்பட்ட இடத்தில் சிறுவனின் உடல் தோண்டி
எடுக்கப்பட்டு ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுவனின் பெற்றோர்களும், வாத்து ஒப்பந்ததாரரும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒன்பது வயது சிறுவனை வேலைக்கு வைத்தது சட்டப்படி குற்றம் என்பதாலும், பெற்றவர்களுக்கு தெரியாமல் புதைத்ததாலும் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆந்திர மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

எஸ்சி, எஸ்டி சட்டப்பிரிவு, சட்டத்திற்கு எதிராக சிறுவனை வேலைக்கு அமர்த்திய
பிரிவு, யாருக்கும் தெரியாமல் சடலத்தை புதைத்தது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையின் முடிவில் வாத்து ஒப்பந்ததாரர் உட்பட, ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்யப்படுவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags :
Advertisement