For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜக-வை சேர்ந்த வருண் காந்தி காங்கிரஸ் கட்சியில் இணையவேண்டும்!” - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

09:12 PM Mar 26, 2024 IST | Web Editor
“பாஜக வை சேர்ந்த வருண் காந்தி காங்கிரஸ் கட்சியில் இணையவேண்டும் ”   ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
Advertisement

பாஜக எம்.பியான வருண் காந்தி காங்கிரஸில் இணையவேண்டும் என அக்கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “ வருண் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும். அவர் வந்தால் நாங்கள் மகிழ்ச்சியாக ஏற்போம். அவர் படித்தவர். அவருக்கு கிளீன் இமேஜ் உள்ளது. காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பாஜக சீட் வழங்க மறுத்துவிட்டது. அவர் காங்கிரஸுக்கு வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்

கடந்த சில ஆண்டுகளாகவே வருண் காந்தியை பாஜக ஓரங்கட்டி வருவதாக குற்றச்சாடு எழுந்தது. இதன் காரணமாக பல சமயங்களில் பாஜகவை வருண் காந்தி கடுமையான விமர்சித்துள்ளார். எனவே பிலிபிட் மக்களவைத் தொகுதியில் வருண் காந்திக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் சுல்தான்பூரில் போட்டியிட அவரது தாயார் மேனகா காந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறிய உத்தரப் பிரதேச அமைச்சர் ஜிதின் பிரசாதா பிலிபிட் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரசாதா மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தில் இரண்டு முறை அமைச்சராக இருந்தவர். இவர் கடந்த 2021ல் பாஜகவுக்கு தாவினார்.

வருண் காந்தி 2009 இல் பிலிபிட் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டபோது 4.19 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் அவர் வென்றார். எனவே அவருக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஒருவேளை வருண் காந்தி காங்கிரஸில் இணைந்தால் அது உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு பெரும் பலமாக மாறும் என்று கணக்கு போடப்படுகிறது.

Tags :
Advertisement