For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பாஜகவில் இருந்து யார் விலகினாலும் பொருட்படுத்த வேண்டாம்" - அண்ணாமலை பேச்சு!

02:46 PM Mar 30, 2024 IST | Web Editor
 பாஜகவில் இருந்து யார் விலகினாலும் பொருட்படுத்த வேண்டாம்    அண்ணாமலை பேச்சு
Advertisement

பாஜகவில் இருந்து யார் விலகினாலும் பொருட்படுத்த வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு,  அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இத்தேர்தலில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் சிலரை வேட்பாளர்களாக பாஜக களம் இறக்கி உள்ளது.  இந்நிலையில்,  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன.  பரப்புரைக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.  அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : மதுபான கொள்கை ஊழல் விவகாரம் - அமலாக்கத்துறையின் அதிரடி மூவ்...டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சம்மன்!

பாஜகவில் இருந்து யாரு விலகினாலும் பொருட்படுத்த வேண்டாம் என அதிமுகவில் இணைந்த தடா. பெரியசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தாவது :

"பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை வெற்றி பெற செய்தால் தான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரும்.  பாஜகவில் இருந்து யாரு விலகினாலும் பொருட்படுத்த வேண்டாம். அரசியலை தவறாக செய்பவர்களுக்கு பாஜகவில் இடம் இல்லை.  வேட்பாளர் பதவி கொடுக்காததால் வேறு கட்சியில் இணைந்தவர்கள் எல்லாம் வேட்பாளர் இல்லை.  நேர்மையான களத்தில் போராடி யாரு வெற்றி பெறுபவர்களுக்கு தான் பாஜகவில் இடம் உண்டு.  அதன் அடிப்படையில் தான் பிரதமர் நரேந்திர மோடி சிதம்பரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கார்த்திகாயினியை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்"

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Tags :
Advertisement